8

கல்லூரி முடித்த தருணம் 3மாதம் முன்பு புராஜெக்ட் செய்ய சென்னை வந்தபோது ஏற்பட்ட பழகத்தின்பேரில் நண்பர்கள்தம் தொழில்முனைப்பில் ஒரு புது முயற்சிக்காக நண்பர் ஒருவர் பணம் போட(CFO) இன்னொருவர் வழிநடத்த(CEO) மீதமுள்ள மூவர் (1Senior + 2 Junior)புரோகிராமராக "தொழில்" படித்து வேலை செய்வதென முடிவெடுத்து Android Game Developing கம்பெனி தொடங்க கிளம்பினோம்., என் கண்ணிற்கு சொர்க்கமாக தெரிந்த மைசூருக்கு. 2 அறையுள்ள ஒரு வீடு ஒன்று சமையலறையாகவும் மற்றொன்று ஆபிஸ்+பார்+சாப்பாட்டு அறை+அலுவலக அறை என்று … Continue reading 8

Advertisements

சோகம் ↔ சந்தோஷம் #3

HUSBAND VERSION OF RUN LOLA RUN ம : டேய் நான் 2 சுடி எடுத்திருக்கேன் டா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உனக்குத்தான் பிடிக்குமானு தெரியல., க : எனக்கு ஏன் டீ பிடிக்கனும் நீ இல்லாதப்போ நான் போட்டுட்டு வெளில போகப் போறனா ஹிஹி... ம : ச்சை ஆளும் மூஞ்சிகளும் உன்ட்ட போயி கேட்டேன் பாரு சிடு மூஞ்சி எப்பப்பாரு ஏட்டிக்கிபூட்டியா பேசிகிட்டு Stop n Rewind ம : டேய் நான் … Continue reading சோகம் ↔ சந்தோஷம் #3

ரசிப்பவர்கள் உண்டோ…

நிர்வாண ஆணின் உடலை., வாழ்ந்து காட்டும் பெண்ணியத்தை., ஊடலில் பேசுவதை., மோடி அம்பேத்கர் புகழ் பாடுவதை., லாபமில்லா பாராட்டை., அன்பே சிவம் பிடிக்காது என்போரை., விடுமுறையில் விருந்தினர் வருகையை., 2ம் வகுப்பு இரயில் பயணத்தை பிடிக்காதெனுபவரை., அலுவலக மேலாளரை., பிச்சையெடுக்கும் குழந்தையை., புரணிபேசும் ஆணை., அழும் அப்பனை., சாப்ளின் படத்தை சீரியஸா பார்ப்பதை., பெண்ணின் ஆட்டோகிராப் "காதல்களை"., நண்பனின் தற்கொலையை ., எதிரியின் வாழ்வை., கிரிக்கெட் போட்டியின் போது சீரியல் பார்பவரை., இந்த மொக்கையை., இதுகளோடு என்னையும்., … Continue reading ரசிப்பவர்கள் உண்டோ…

செல்லமக்காவும் சின்னராஜூம்

டேய் மணி நான் போறேன் எந்திச்சி குளி., மேகலை அவனையும் எழுப்பிவிடு நீ தலைக்கு குளிக்காத தலைக்கு ஞாயித்து கிழமை குளிச்சிக்கலாம்., தலையை வாரிக்கட்டி பவுடர் அடித்தவாரே மணியின் காலில் ஒரு மிதி மிதிக்கிறாள் செல்லம்மா., இன்னைக்கும் லேட்டாகிப்போச்சே என்ன அவசர அவசரமாக ஏலேய் எந்திச்சி கிளம்பு., அக்கா கூடவே போ போறப்போ கடைக்கு வந்துட்டுப்போங்கனு கத்திக்கொண்டே டீ, வடை, இட்லி, தோசை, முட்டை பரிமாறத் தேவையான உபகரணங்களை வண்டியில் தூக்கி போட்டவாரு தள்ள ஆரம்பித்தால்., என்ன … Continue reading செல்லமக்காவும் சின்னராஜூம்

#நான்_முதல்வர்_ஆனால்II-மதுவிலக்கு

ஊழல் போல் ஒரு அரசமைப்பையே மாற்றும்னு எதிர்பார்த்த ஒரு பிரச்சனை இந்த மது. எவ்வித சலனமுமின்றி மீண்டும் அதே செயலற்ற ஆணவ அரசை நிறுவியதில் குடி'மக்களின் பங்கு கணிசமுண்டென அவதானிக்கிறேன்.சரியோ தவறோ படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம்றதுல எனக்கு உடன்பாடு உண்டு. இவ்வளவு செயலற்றத்தனமாக ஒரு ஆட்சி புரிந்தும் தன்னையே மீண்டும் ஆட்சியில் தொடரச் செய்ததிற்கு நன்றிக்கடனாக முதற்கட்டமாக 500 கடைகள் அடைக்கப்படும் பணிநேரம் 12-10 ஆக குறைக்கப்படும்னு ஓர் அறிவுப்பு இது எவ்விதத்தில் பலனளிக்கும். எதையும் செய்யாமல் … Continue reading #நான்_முதல்வர்_ஆனால்II-மதுவிலக்கு

ஏன் வெற்றி முக்கியம் ஓர் உளவியல்.!?

தோணி அடிச்ச அந்த 186* எங்க ஊர்ல கரண்ட் இல்லைங்குறதுக்காக பஸ் புடிச்சு கேரளாவுல போய் மேட்ச் பாத்ததெல்லாம் அவ்ளோ எளிதா மறக்க முடியுமா என்ன!!! இவ்வரிகளை படித்தமாத்திரத்திலிருந்து இதனிலுள்ள உளவியல் தான் என்னை குழப்பிக்கொண்டே இருக்கிறது.அதிலுள்ள கரு சிறுபிள்ளையும் அறியும்.பிறர் மெச்சும்படி வாழ வேண்டுமென்னும் உளவியல் கூட சற்று ஏற்றுக்கொள்ளும் வகையிலுள்ளது.ஆனால் இந்த ஜெயித்தவர்களை மட்டும் தேடிப்பிடித்து அவர்களைக் கொண்டாடும் மனநிலை எங்கிருந்து வந்திருக்கும்., பாரபட்சம்பாராமல் எல்லோருள்ளும் ஒளிந்துள்ள ஓர் மாயத்தோற்றம். எப்போது எங்கிருந்து ஆரம்பித்திருக்குமென்றால் … Continue reading ஏன் வெற்றி முக்கியம் ஓர் உளவியல்.!?

கொடூரம் – ஓர் காதல்கதை

சாதி இடைச்சாதி உட்சாதினு ஆயிரத்திசொச்சம் சாதிகள் இருப்பதால் எச்சாதியென்று குறிப்பிடாமல் ஆணவக்கொலை செய்யத்துணியும் அனைத்துச் சாதியினருக்கும் சமர்ப்பணம்... ஏங்க அவனும் நம்ம சாதி தானுங்களே விட்றுங்களேன் போயித்தொலையட்டும் சனியன். கொண்டை முடியை சேர்த்துப் பிடித்து இயலாமையை தன் கோழைத்தனத்தை மனைவியிடம் காட்டியவாரே ஏ டீ சிறுக்கி மவளே எல்லாம் உன்னால வந்தது வீட்டுல அவ என்ன செய்தா ஏது செய்தானு பார்த்து நட்டராத்திர பேசுறப்போலாம் என்னேதுனு கேட்டு கண்டிச்சிருந்தா இவ்ளோ கேவலம் வந்திருக்குமா வந்துட்டா நீலிக்கண்ணீரை வடிச்சிக்கிட்டு., … Continue reading கொடூரம் – ஓர் காதல்கதை

விசாரணையின் மீதொரு விசாரணை ஓர் உளவியல் பார்வை…

உண்மையில் வெற்றிமாறன் கூட இவ்வளவு நுணுக்கங்களுடனும் / குறியீடுகளுடனும் இப்படத்தை அனுகியிருப்பாரா அவருக்கே வெளிச்சம். அவ்வளவு நேர்மறை / எதிர்மறை விமர்சனங்கள். எதெப்படியோ ஒரு நல்ல சினிமா சில நல்ல விமர்சனர்களை உருவாக்குவது ஆரோக்கியத்திற்குரியதே.அவ்வகையில் வெற்றிமாறனுக்கும் இதுவரை எழுதிய / இனியும் எழுதப்போகும் அனைத்து விமர்சனர்களுக்கும் பொதுவாய் ஒரு வினா எழுப்புகிறேன் பதிலிருந்தால் என்னை தெளிவுபடுத்தவும். இரண்டு துப்பாக்கி ரவைகளின் சத்தம் காதில் விழ மக்கள் மீதும் மீடியா மீதும் ஒரு விமர்சனத்துடன் படம் முடிகிறது. நாமளும் ஒருவித … Continue reading விசாரணையின் மீதொரு விசாரணை ஓர் உளவியல் பார்வை…

We miss you Dhoni sir…

தோனியை வெறுப்போருக்கு நெஞ்சை நிமிர்த்தியும் தோனியை விரும்புவோருக்கு பாதம்பணிந்தும் சமர்ப்பிக்கிறேன் பாகம் : முதலும் இறுதியும் : களமோ வீடோ படமோ பெரும்பாலும் எவரெருவரின் செயலுக்கும் கண்பார்வைக்கும் எதிருள்ளவர்கள் பயப்படுகின்றனரோ அவரே நம் பெரும்பாலானோரின் விருப்பத்திற்குரியவர். கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன அடிக்கிறார்களோ இல்லையோ சிலர் களத்தில் நின்றால் போதும் எதிரணி மொத்தமும் கலங்கும் சார்பணி நம்பிக்கை பெறும் சேவாக்/கெயில்/அப்ரிடி/டிவில்லியர்ஸ் இவர்கள் அதில் உச்சம் இந்த உச்சங்களில் ஒருவரே  தோனி., இந்த பெயரைப் பார்த்ததுமே உங்களில் பெரும்பாலோனார் இந்த … Continue reading We miss you Dhoni sir…

சாப்பாடு

ஏழைக்கு சாப்பாடு அமிர்தம்... யாசிப்போருக்கு சாப்பாடு வாழ்க்கை... குழந்தைக்கு சாப்பாடு நஞ்சு... இளைஞனுக்கு சாப்பாடு கொண்டாட்டம்... முதியவர்களுக்கு சாப்பாடு சலிப்பு... காதலர்களுக்கு சாப்பாடு நாகரீகம்... கட்டில் மனைவிக்கு சாப்பாடு ஏமாற்றம்... கல்யாணத்தில் சாப்பாடு ஆடம்பரம்... இழவில் சாப்பாடு அத்தியாவசியம்... மணி அடிச்சா சாப்பாடு... பசிக்கும்போது சாப்பாடு... தோனும்போதெல்லாம் சாப்பாடு... சாப்பிடுறதுலாம் சாப்பாடாகுமா... சாப்பிடாததுலாம் சாப்பாடு இல்லைனாகுமா... சாப்பாடா அது சொர்க்கம்... சாப்பாடா அத நினைச்சாலே பயந்துவருது... கேட்காத கல்லுக்கு சாப்பாட்டுப் படையல்... கேட்கும் மனிதனுக்கும் சாப்பாடு எள்ளல்... … Continue reading சாப்பாடு