Njan Steve Lopez

ராஜீவ் ரவியைக் கொண்டாட முதல்காரணம் இந்திய சினிமா திரைக்கதை கட்டமைப்புல நாயகன் இந்திந்த நற்பண்புகளுடன் இருக்கனும் என்பதெல்லாம் இப்படத்தில் இல்லை., படத்துல 3 பாத்ரூம் சீன் வரும் அதுல நாயகனோட உட்மனக்கிடக்கைகளில் இருக்குறதுலாம் வெளிப்படும் தான் ஆனா அதுலாம் தானே அந்த வயதிற்குரிய இயல்பு., இழவு வீட்ல பசிக்குற மாதிரி ஆண்களுக்கு இடம்நேரம் பார்க்காம வர்றது இந்த காமம் அத போறபோக்குல காட்டியிருப்பார்.,சாதாரணமான சொல்லனும்னா படத்துல ஒரு வசனம் வரும் மனிதப்பற்று இல்லாம படிச்சி என்ன உபயோகம்னு., … Continue reading Njan Steve Lopez

Advertisements

விசாரணையின் மீதொரு விசாரணை ஓர் உளவியல் பார்வை…

உண்மையில் வெற்றிமாறன் கூட இவ்வளவு நுணுக்கங்களுடனும் / குறியீடுகளுடனும் இப்படத்தை அனுகியிருப்பாரா அவருக்கே வெளிச்சம். அவ்வளவு நேர்மறை / எதிர்மறை விமர்சனங்கள். எதெப்படியோ ஒரு நல்ல சினிமா சில நல்ல விமர்சனர்களை உருவாக்குவது ஆரோக்கியத்திற்குரியதே.அவ்வகையில் வெற்றிமாறனுக்கும் இதுவரை எழுதிய / இனியும் எழுதப்போகும் அனைத்து விமர்சனர்களுக்கும் பொதுவாய் ஒரு வினா எழுப்புகிறேன் பதிலிருந்தால் என்னை தெளிவுபடுத்தவும். இரண்டு துப்பாக்கி ரவைகளின் சத்தம் காதில் விழ மக்கள் மீதும் மீடியா மீதும் ஒரு விமர்சனத்துடன் படம் முடிகிறது. நாமளும் ஒருவித … Continue reading விசாரணையின் மீதொரு விசாரணை ஓர் உளவியல் பார்வை…

இயக்குநர் #2015

என் விருப்பப்படி இருந்தாலும் கொஞ்சம் உண்மையும் கூட & எனக்குப் பிடித்த/விரும்பும் துறை என்பதால் இயக்குநர் துறையை மட்டும் சல்லடையிட்டுள்ளேன். வழக்கம்போல இதும் ஜூனியர்களின் வருடம் தான் #2015 காக்கா முட்டை (மணிகண்டன்) குற்றம் கடிதல் (பிரம்மா G) டிமாண்டி காலனி (அஜய் ஞானமுத்து) கிருமி (அனுசரண்) தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (ராம்பிரகாஷ் ராயப்பா) இன்று நேற்று நாளை (ரவிக்குமார்.R) 49 O (ஆரோக்கியதாஸ்) மாயா (அஸ்வின் சரவணன்) ஆரஞ்சு மிட்டாய் (பிஜூ விஸ்வநாத்) கத்துக்குட்டி(ஈரா … Continue reading இயக்குநர் #2015

நடிகன்…

போகாத கல்லூரிக்கு அடிக்கடி போகச் சொன்னார்கள்!! போடாத சண்டையை போட்டேன் என்றார்கள்!! வரவே வராத நடிப்பை நடித்தேன் என்றார்கள்!! என் மகளாய் நடித்தவளை என்னவளாய் உடன் கிடத்தினார்கள்!! என் மனைவியாய் நடித்தவளை அம்மாவென்று சொல்லச்சொன்னார்கள்!! பார்த்தாலே டெஸ்ட்டோஸ்டீரான் பொத்துக்கொண்டுவரும் ஒருத்தியை கடவுளென்று வணங்கச் சொன்னார்கள்!! நான் வெறுமென நடப்பதையே இசை கொண்டு கெத்தாக்கினார்கள்!! பிட்டத்தை பிணைவதையும் ஆண்மையாக்கினார்கள்!! கதைக்கான நடிகனாய் நடித்தால் மொக்கையென்றார்கள்!! நடிக்கான கதையில் நடித்தால் தரகெத்தென்று கூத்தாடினார்கள்!! ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆவதற்கும் என்னை … Continue reading நடிகன்…