பல கிழவிகளின் உள்மனக்குமுறலிருந்து

உங்கப்பனுக்கு வாக்கப்பட்டப்பாவத்துக்கு ஒரு காலம்வரை வடிச்சிக்கொட்டுனேன் உங்களப்பெத்து குண்டிகழுவி குளிப்பாட்டி தாலாட்டி சீராட்டி பக்குவம் பார்த்து வளர்த்து நல்லது கெட்டது செஞ்சு கல்யாணமும் முடிச்சு வச்சி அப்பாடானு உக்காந்தா உனக்கொரு புள்ளபொறக்கும் அதுக்கு குண்டிகழுவ பீத்துணி துவைக்கனு வேலை வாங்குறது மட்டுமில்லாம அதுங்க போயி எங்கையாவது விழுந்துட்டு வந்தா உனக்கு கொழந்தைய பாக்குறதவிட வேறென்ன வேலைனு என்னையவே திட்ற சரி அதுங்களாவது வளர்ந்து நம்மளை மதிக்கும்னா அதுங்களும் காலம்போன காலத்துல சும்மா கெடக்கா பாரேனு என் காதுபடகேக்குதுக … Continue reading பல கிழவிகளின் உள்மனக்குமுறலிருந்து

Advertisements

சாப்பாடு

ஏழைக்கு சாப்பாடு அமிர்தம்... யாசிப்போருக்கு சாப்பாடு வாழ்க்கை... குழந்தைக்கு சாப்பாடு நஞ்சு... இளைஞனுக்கு சாப்பாடு கொண்டாட்டம்... முதியவர்களுக்கு சாப்பாடு சலிப்பு... காதலர்களுக்கு சாப்பாடு நாகரீகம்... கட்டில் மனைவிக்கு சாப்பாடு ஏமாற்றம்... கல்யாணத்தில் சாப்பாடு ஆடம்பரம்... இழவில் சாப்பாடு அத்தியாவசியம்... மணி அடிச்சா சாப்பாடு... பசிக்கும்போது சாப்பாடு... தோனும்போதெல்லாம் சாப்பாடு... சாப்பிடுறதுலாம் சாப்பாடாகுமா... சாப்பிடாததுலாம் சாப்பாடு இல்லைனாகுமா... சாப்பாடா அது சொர்க்கம்... சாப்பாடா அத நினைச்சாலே பயந்துவருது... கேட்காத கல்லுக்கு சாப்பாட்டுப் படையல்... கேட்கும் மனிதனுக்கும் சாப்பாடு எள்ளல்... … Continue reading சாப்பாடு

நானும் சிரிப்பேன்…

கணவனின் நெற்றி முத்தமோ... மாதவிடாய் தரும் வலியோ... பிறக்கும் குழந்தை பற்றிய சிலாகிப்புகளோ... எங்களுக்கான ஒரு பாடல் வரியோ... என் பெயருடைய ஒருவரோ... கூட்ட நெரிசலினூடான ஓர் பயணமோ... சந்தோஷமான சிறு நொடியோ... அழ தோள் தேடும் பெரும் நிமிடமோ... அப்பாவின் அரவணைப்போ... இத்யாதி இத்யாதிகளில்... ஏதோ ஓர் இழவு பொழுதுகளில்... நிச்சயமாய் சோகமாய் ஒரு சிரிப்பையோ தனியறையில் சிரிப்புடன் கண்ணீர் துளிகளையோ உதிர்த்திருப்பாள் எங்களை நினைத்து என்றமிதப்புடன்., நானும் சிரிப்பேன்... - கோபி.!? எப்போதும் வென்றான்

நீயானால் நானாவேன்

நீ மோடியானால் நான் உலகமாவேன்.., நீ மாடானால் நான் திடீர் ஹிந்துத்துவாவேன்.., நீ இசையானால் நான் வயலினாவேன்.., நீ நடனமானால் நான் பெல்லியாவேன்.., நீ ஆன்ட்ராய்ட் ஃபோனானால் நான் அப்டேட்டாவேன் .., நீ கணினியானால் நான் ஃஆன்டி வைரஸாவேன் .., நீ ஆணானால் நான் மீசையாவேன் .., நீ பணமானால் நான் ஏழையாவேன்.., நீ விலங்கானால் நான் உணவாவேன்.., நீ பறவையானால் நான் மரமாவேன்.., நீ செடியானால் நான் பூச்சியாவேன்.., நீ அமைதியானால் நான் காற்றாவேன்.., நீ … Continue reading நீயானால் நானாவேன்

சோகம் ↔ சந்தோஷம் #2

உறவுகளை புரிந்துகொள்ளும் போது!! நண்பனின் நிலைஅறியும் போது!! காதலை உணரும் போது!! கல்யாணத்தின் பிக்கல் கண்முன் நிழலாடும் போது!! கணவன் எனும் பொறுப்பில் பிடுங்கல் அதிகமாகும்போது!! தோல்வியை வெற்றியாக்க முயலும் போது!! தோல்வியை வெற்றியாக்கி முடித்த போது!! மடமையில் தெளிவு கொண்ட போது!! தவறில் தன்னிலை உணர்ந்த போது!! சந்தோஷத்தை வெளிக்கொணர வழி தேடும் போது!! இயலாமையை சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது!! பெண்களே பொறாமைபடும் அளவுக்கு!! கின்னஸில் இடம்பெறும் அளவிற்கு!! செலவி்ல்லாமல் முகம் அழகாக!! இப்படி … Continue reading சோகம் ↔ சந்தோஷம் #2

நிர்வாக மூலம்…

மடையன் என்றான் நண்பன்., முட்டாப்பயலுவ என்றாள் மாணவி., விலைமாது மகனென்றாள் விலைமாது., வெட்டித்தெண்டம் சார் என்றார் நோயாளி., பெண்பித்தனென்றது காதல் ஜோடி., காஸ்ட்டிலி இன்வஸ்மெண்ட் என்றார்கள் தொழில் முனைவோர்., நிர்வாக அரசியலென்றார் பிரதமர்., கலையென்றும் வர்ணிக்கிறார்கள் கற்பனைவளம் மிக்கோர்., கல்லென்றும் அழைக்கின்றனர் சில பகுத்தறிவுடையோர்., பல ஆறறிவு பிதற்றல் மாமேதைகள் அதனை கடவுளென்றும் கூறுகின்றனர்..., - கோபி.!? எப்போதும் வென்றான்