வாட்டே தமிழ்நாடு

கேரளால கோவிலுக்குலாம் போனா மூச்சுவிட்டாக்கூட குண்டூசி விழுந்தாக்கூட கேட்கும் அந்தளவு பயபக்தியா அமைதியா இருப்பாங்க ஆனா இங்க பாருங்க கோவில்ல வந்துதான் ஊர்க்கதை பேசுறது, சீரியல் பத்தி பேசுறது, போட்டிருக்கிற சேலை மேக்கப்பத்தி பேசுறதுனு எல்லாம் கோவில்ல வச்சித்தான் கோவில்ன்றது யோகிகள் முனிவர்கள் நாயன்மார்கள் தவம் செய்ற இடம் அவாக்களெல்லாம் தவம் செய்றப்போ நாமளும் கூடச் சேர்ந்து பிராத்திச்சோம்னா நமக்கும் நல்லதுநடக்கும் நான் என்ன வேணா பண்ணிட்டுப்போகலாம் உங்களுக்கு புரியப்போறதில்லை அதுக்காக நான் சொல்லாமலா இருக்கேன் ஏன் … Continue reading வாட்டே தமிழ்நாடு

Advertisements

பல கிழவிகளின் உள்மனக்குமுறலிருந்து

உங்கப்பனுக்கு வாக்கப்பட்டப்பாவத்துக்கு ஒரு காலம்வரை வடிச்சிக்கொட்டுனேன் உங்களப்பெத்து குண்டிகழுவி குளிப்பாட்டி தாலாட்டி சீராட்டி பக்குவம் பார்த்து வளர்த்து நல்லது கெட்டது செஞ்சு கல்யாணமும் முடிச்சு வச்சி அப்பாடானு உக்காந்தா உனக்கொரு புள்ளபொறக்கும் அதுக்கு குண்டிகழுவ பீத்துணி துவைக்கனு வேலை வாங்குறது மட்டுமில்லாம அதுங்க போயி எங்கையாவது விழுந்துட்டு வந்தா உனக்கு கொழந்தைய பாக்குறதவிட வேறென்ன வேலைனு என்னையவே திட்ற சரி அதுங்களாவது வளர்ந்து நம்மளை மதிக்கும்னா அதுங்களும் காலம்போன காலத்துல சும்மா கெடக்கா பாரேனு என் காதுபடகேக்குதுக … Continue reading பல கிழவிகளின் உள்மனக்குமுறலிருந்து

ஆட்டுத்தொழுவில் ஒரு யுகத்திற்காக காதல்

அன்று திருவிழாவின் இரண்டாம்நாள் (கறிநாள்) காலை பூஜை முடிந்து கெடா பழிகொடுத்து பின் அதனை எதிர்வீட்டுத் தொழுவில் தலைகீழாக கட்டித்தொங்கவிட்டு உரித்துக்கொண்டிருந்தனர். ஆடு மாட்டுக்கு தண்ணி ஊத்தும் தொட்டி ஒன்று உண்டு அதனுள் அமர்ந்து உரிப்பதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தான் நாயகன். எப்பிறவியில் நாயகன் செய்தப்புண்ணியத்தின் பலனோ நாயகியும் அவ்விடம் வந்தாள். இது முற்றிலும் எதோச்சையாக நடந்தவொன்றாக இருக்கலாம் பட்டனத்து பொண்ணு ஆடு உரிப்பதை காண வந்தாளோ அ காலை உணவு செரிக்க நடந்து வந்தாளோ நாயகியே அறிந்தவொன்று. நாயகனுக்கோ … Continue reading ஆட்டுத்தொழுவில் ஒரு யுகத்திற்காக காதல்

ஆண்களால் ஆண்களுக்கே பாதுகாப்பில்லாத நாடு இந்தியா

ஒளிவுதிவசத்தே களி படத்தோட இயக்குநர் சனல் குமாரோட ஒரு குறும்படம் Frog. படம்லாம் மனசைப் பாதிக்குமான்ற கேள்வியையே இப்படம் பார்த்தபிறகு தான் விட்டேன். (சுட்டி கீழே இணைத்துள்ளேன்.) நிற்க. படம்பார்த்துவிட்டு படம் சம்பந்தமான விமர்சனக்கட்டுரைகள் படித்துக்கொண்டிருந்தேன். அவ்வாறாக ஒருவரின் விமர்சனக்கட்டுரையின் சில வரிகள் கீழே நெரிசலினூடேயான பேருந்து பயணத்தின் போது மாமா மடியில உக்காந்துக்கோனு உட்கார வச்சாங்க அந்த மாமா மடியில உட்காரவும் வச்சான் குஞ்சுமணிய ஆட்டவும் செஞ்சான் அந்த அண்ணன் வீட்ல போயி படினு அனுப்பி … Continue reading ஆண்களால் ஆண்களுக்கே பாதுகாப்பில்லாத நாடு இந்தியா

Njan Steve Lopez

ராஜீவ் ரவியைக் கொண்டாட முதல்காரணம் இந்திய சினிமா திரைக்கதை கட்டமைப்புல நாயகன் இந்திந்த நற்பண்புகளுடன் இருக்கனும் என்பதெல்லாம் இப்படத்தில் இல்லை., படத்துல 3 பாத்ரூம் சீன் வரும் அதுல நாயகனோட உட்மனக்கிடக்கைகளில் இருக்குறதுலாம் வெளிப்படும் தான் ஆனா அதுலாம் தானே அந்த வயதிற்குரிய இயல்பு., இழவு வீட்ல பசிக்குற மாதிரி ஆண்களுக்கு இடம்நேரம் பார்க்காம வர்றது இந்த காமம் அத போறபோக்குல காட்டியிருப்பார்.,சாதாரணமான சொல்லனும்னா படத்துல ஒரு வசனம் வரும் மனிதப்பற்று இல்லாம படிச்சி என்ன உபயோகம்னு., … Continue reading Njan Steve Lopez

இவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு தெரியாம போச்சே

ஆமா அது என்ன படம்., என்னபடமா இருந்தா என்ன கடைசியா  ஒரு தடவை பார்த்துக்கிடுறேனே விடுங்களேன்., அங்கென்ன ஓ ரம்மியா ஒரு கையாவது போட்டுட்டு வரேனே ப்ளிஜ் பா., தம்பி எப்போ வர்றானாம் காலைல வந்துடுவான்ல லேட்டாகாதுல., அடேய் என்னடா அதுக்குள்ள விடிஞ்சிருச்சா அதுசரி ஏன் இவ்ளோ பேர் வந்திருக்கானுவ., வருத்தத்துல வந்தானுவலா கம்பார்ம் பண்ண வந்தானுவலா சரிவுடு., வாடா மவனே நல்லாயிருக்கியா பாப்பா கூட சேர்ந்து அம்மாவ பார்த்துக்கோ ஒரு சொட்டு கண்ணீராவது விட்றுடே உலகம் தப்பா … Continue reading இவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு தெரியாம போச்சே

என்கிறார்கள்

கோவில் இடத்துல வீடாம் அதான்  சாமி நம்மளை ஆட்டிப்படைக்காம் என்கிறார்கள் அப்போ வாங்க பேயைக் கூட்டிட்டு வந்து சாமியோட்டுவோம் என்றால் போடா லூசுப்பயலே என்கிறார்கள்.! புனிதரின் இடத்தில் எப்படி கழிவறை என்கிறார்கள் அப்போ உங்க வயித்துல மலம் வச்சிட்டு உள்ள போறிங்களே பிரச்சனை இல்லையானா தர்க்கவாதி என்கிறார்கள்.! கொன்னவன் எங்காளு செத்தவன் அவனும் எங்காளுதான் ஏன் கேட்டால் மதத்தின் உட்பிரிவு கடவுள் ஒன்றே என்கிறார்கள்.! அங்கு பேயிருக்கு என்கிறார்கள் பொம்பளைப்பேயா பாஸ் என்றால் அடக்காமப்பிசாசே என்கிறார்கள்.! ஜெ சமாதி … Continue reading என்கிறார்கள்

வான்கோழி பிரியாணியும் வாழ்க்கை தத்துவமும்

சவுதியில் கோபியும் கேரளாவைச் சேர்ந்த ராஜீவும் ஒரே அறையில் பரதேச வாழ்க்கை வாழ்பவர்கள்., கோபிக்கு இந்த கடவுள் மீதுள்ள அவநம்பிக்கையைத்தாண்டி அவனால் தாங்க முடியாத கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் ஒரு மன சமாதானத்திற்கு வேண்டி தெரிந்தவர்கள் எல்லாரையும் கூப்ட்டு வைத்து அவனே சமைத்து சாப்பாடு போட்டு கொடுமைபடுத்துவது வழக்கம்., அன்றைய நாள் எவ்வளவு பணி இருப்பினும் சளைக்காமல் செய்து முடிப்பான்., இவ்வாறு ஒரு அசாதாரண சூழலில் நேற்று உடனிருந்த ஒரு 16-20 பேருக்கு உணவளிப்பதாய் திட்டமிருந்தான், அதற்கு அழைத்தவர்களிடம் … Continue reading வான்கோழி பிரியாணியும் வாழ்க்கை தத்துவமும்

ராஜலட்சுமியுடன் ஓர் இரவு

மறுநாள் தேர்தல் அலுவலகத்தில் போயே ஆகவேண்டுமென்று அடம்பிடித்து விடுப்பெடுத்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு 20 நிமிடம் முன்பு எக்மோர் வந்தடைந்தான் சிபி. சூளைமேட்லையே கோவில்பட்டிக்கான டிக்கெட் எடுத்துவிட்டதால் இரயிலைப் பிடித்தால் போதுமென்று படபடவென்று ஒடிவந்தான். அங்கு அவனைவிட வேகமாக பலர் போய்க்கொணெடிருந்தனர் 5 நம்பர் ப்ளாட்பார்ம் நோக்கி விரைந்தான் பின் என்ஜின் பக்கம் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் வெளியிலிருந்து நோட்டமிட்டான் ஒரு மணி நேரம் முன்பே இரயில் அவ்விடமிருப்பதால் கூட்டத்தில் அல்லோலப்பட்டது., சரி முன்னாடிப்போயிப் பார்ப்போம் சரிவரவில்லையெனில் … Continue reading ராஜலட்சுமியுடன் ஓர் இரவு

பட்டுக்கோட்டையார் சொன்னார்/சொல்கிறார்/சொல்லிக்கொண்டே இருப்பார்

குழந்தைகளுக்கு : படிப்பு தேவை-அதோடு உழைப்பும் தேவை-முன்னேற படிப்புத் தேவை அதோடு உழைப்பும் தேவை!  காசு உண்மை தெரியும் உலகம் தெரியும் படிப்பாலே-நம் உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே பெண்களுக்கு : இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே இதுதான் உலகம், வீண் அனுதாபம் கொண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே ஆண்களுக்கு : கண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும் காதலும் வாழ்வும் தொடர்ந்திடும் கண்ட கண்ட பக்கம் திரிஞ்சா கையும் காலும் வாழ்வும் துண்டு துண்டாகத் … Continue reading பட்டுக்கோட்டையார் சொன்னார்/சொல்கிறார்/சொல்லிக்கொண்டே இருப்பார்