இவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு தெரியாம போச்சே

ஆமா அது என்ன படம்., என்னபடமா இருந்தா என்ன கடைசியா  ஒரு தடவை பார்த்துக்கிடுறேனே விடுங்களேன்.,

அங்கென்ன ஓ ரம்மியா ஒரு கையாவது போட்டுட்டு வரேனே ப்ளிஜ் பா.,

தம்பி எப்போ வர்றானாம் காலைல வந்துடுவான்ல லேட்டாகாதுல.,

அடேய் என்னடா அதுக்குள்ள விடிஞ்சிருச்சா அதுசரி ஏன் இவ்ளோ பேர் வந்திருக்கானுவ.,

வருத்தத்துல வந்தானுவலா கம்பார்ம் பண்ண வந்தானுவலா சரிவுடு.,

வாடா மவனே நல்லாயிருக்கியா பாப்பா கூட சேர்ந்து அம்மாவ பார்த்துக்கோ ஒரு சொட்டு கண்ணீராவது விட்றுடே உலகம் தப்பா பேசும்.,

என் சகதர்மிணியை எங்கடா அவளுக்காவது டீக்காபி கொடுத்தியளா சாப்பிடவச்சி அப்புறம் தெம்பா அழச்சொல்லுங்க.,

பார்றா மழிச்சி, குளிக்க வச்சி, புது ட்ரெஸ்லாம் போட்டுவிட்டு மாலைய ஏம்லே போடுறிங்க நசநசனு இருக்கு.,

மக்களே என்ட்ட இவ்ளோ நல்லது இருக்கா அடப்பிக்காளிப்பயலுவுகளா நேத்துவரை திட்டிட்டு தானடே இருந்திங்க.,

தப்பு கொஞ்சம் மெதுவா அடிக்கச்சொல்லுங்களேன் அப்புறம் எந்திச்சி ஆடி எல்லோரும் பயந்து ஓடி தேவையா.,

மூடுன வாய்க்குள் அரிசியை ஏம்லே போட்டு வேஸ்ட் பன்னுதீக முட்டாப்பய மக்கனு நிரூபிச்சிக்கிட்டே இருங்க.,

முன்னபின்ன வாங்க நல்லா சொகுசா இருக்கு அதவுட்டுட்டு ஏன்டா சுத்துறிங்க உஸ்ஸ்ஸ் கிறுகிறுனு வருதா இல்லையா.,

கோவிந்தா கோவிந்தா ஏ கோயிந்தா கோயிந்தா போட் போட் போட் தகிட தகிட ன்னா வெடி எவ்ளோ வெடி ராக்கெட் 100 சாட்லாம் நைட் போட்டிருக்கலாம் சத்தம் தான் கேட்குது பரவாயில்லை.,

இவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு தெரியாம போச்சே முன்னாடியே போயிருப்பேனேடா.,

அடேய் நா எம்மாம் பெரிய ஆளு என்னைய ஏன்டா விறகு மேல படுக்க வைக்கிங்க சவப்பெட்டிய எங்கடா கல்வெட்டு எதும் எழுதலையா.,

எரிக்குறதுனு முடிவு பண்ணிட்டா மின்சார மயானதுக்கு கொண்டு போயிருக்கலாம்ல சட்டுபுட்டுனு சோலி முடியுமா இல்லையா இதுவேற விடியவிடிய எரியும் சூடு தாங்காம எந்திச்சா இவன் வேற அடிப்பான்.,
untitled
சமாளிப்போம் வாழ்ந்தாச்சாம் சாகுறதா கஷ்டம்.,

-கோபி.!?
எப்போதும்வென்றான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s