வான்கோழி பிரியாணியும் வாழ்க்கை தத்துவமும்

சவுதியில் கோபியும் கேரளாவைச் சேர்ந்த ராஜீவும் ஒரே அறையில் பரதேச வாழ்க்கை வாழ்பவர்கள்., கோபிக்கு இந்த கடவுள் மீதுள்ள அவநம்பிக்கையைத்தாண்டி அவனால் தாங்க முடியாத கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் ஒரு மன சமாதானத்திற்கு வேண்டி தெரிந்தவர்கள் எல்லாரையும் கூப்ட்டு வைத்து அவனே சமைத்து சாப்பாடு போட்டு கொடுமைபடுத்துவது வழக்கம்., அன்றைய நாள் எவ்வளவு பணி இருப்பினும் சளைக்காமல் செய்து முடிப்பான்., இவ்வாறு ஒரு அசாதாரண சூழலில் நேற்று உடனிருந்த ஒரு 16-20 பேருக்கு உணவளிப்பதாய் திட்டமிருந்தான், அதற்கு அழைத்தவர்களிடம் கல்யாணத்திற்கான விருந்தென்று பெயரிட்டிருந்தான்., முந்தைய நாளே மீன் பிரியாணிக்கு மீன் சரியில்லாததால், ஆட்டுக்கறி விலை பட்ஜெட்டை தாண்டி வந்ததால் ஓரளவு மலிவான மற்றும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமென்பதாக எண்ணி 4கிலோ அளவுள்ள ஒரு வான் கோழி வாங்கி வந்திருந்தான்., காலை எழுவது சிரமம் அதனால் வியாழன் இரவே வான்கோழியை வெட்டி மசாலா இட்டு வைப்பதாய் முடிவெடுத்தான். 16699974_878100095663938_248246876_n

எடையும் விலையும் தான் 4கிலோவுக்கானது ஆனா கோழியுனுள் என்னவோ 500கிராமுக்கு மேல் ஐஸ்கட்டி தான்., வெந்நீரில் போட்டு மாமிசத்தை ஓரளவு இழகுவாக்கி படாதபாடுபட்டு வெட்டி முடிப்பதற்குள் இரவு 1.30 ஆயிட்டது., கோழி பரம்பரை தான் ஆனால் எலும்பு ஒவ்வொன்றும் மொத்த சக்தியையும் அல்லது பிரத்யேக ஆயுதம் கேட்கும் அளவு வலு., கோபிக்கு மாமிசத்தை விட ஈரல், குடல் வதக்கல், ரத்தப்பொரியல், மாட்டுவால் சூப்னா கொஞ்சம் ஈர்ப்பு அதிகம்., என்ன யோசித்தானோ என்னவோ இரவோட இரவாக கிடைத்த வான் கோழியின் 3 துண்டு ஈரலை சிறிது கொதிக்கவிட்டு பின் வதக்கி எடுத்து சாப்பிட தயாராகும் போது இரவு 2.15 மணி., ராஜீவ்க்கு சதைப்பகுதி மாமிசத்தை தவிர வேறேதும் ச்சீ ரகமென்பதெல்லாம் வேண்டாமென்றுவிட்டார்., கோபிக்கென்று மெனக்கெடலுடன் செய்ததல்லவா அரை சப்பாத்தியுடன் ரசித்து சாப்ட்டு முடித்து தூங்கப்போக மணி 3 ஆகிவிட்டது., 16730897_878100088997272_861382743_n

அவன்புத்தி அவனறியாததா 6, 6.30 க்கு அலாரம் வைத்து அடித்த எல்லாத்தையும் அமைத்தி எப்படியோ வெள்ளி காலை 7 மணிக்கு எழுந்துவிட்டான்., பின் 200மீ இடைவெளியிலுள்ள அண்ணன் அறையில் போயி பெரிய அண்டா வாங்கிக்கொண்டு டீ அறுந்திவிட்டு எல்லோரையும் மதியம் 1 மணிபோல் தன் அறைக்கு வர சொல்லிவிட்டு அறை வந்தடைந்தான் மணி 8 .30 இருக்கும்., பின் பிரியாணிக்குத்தேவையான சாதனைத்தையெல்லாம் நறுக்கி, அரைத்து எல்லாத்தையும் அடுப்பருகில் ரெடியாக்கி எடுத்து வைத்து விட்டு அத்தாம்பெரிய அண்டாவை கழுவிப்பெறக்கி வெயிலில் ஆற வைத்துவிட்டு., தேவையான அரிசியை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு ஆசுவாசமாக உட்கார்ந்தான் அப்பொழுது தான் ராஜீவ் எழுந்திருந்தார் அவரிடம் சேட்டா எல்லாம்ரெடி நான் சமைக்க ஆரம்பிக்கேன் நீங்க இந்த தேங்காப்பால் மட்டும் எடுத்து தாங்கவென்று அவரையும் படுக்கையைவிட்டு எழும்ப வைத்து சட்டியை அடுப்பில் வைக்கும் போது மணி 10 இருக்கும்.,
ஆண்கள் சமையலில் உள்ள அழகென்னவென்றால் இது இதுலாம் வேணும் இதலாம் இல்லைனா சமைக்கவே முடியாதுன்ற பேச்சுக்குலாம் இடமே இல்லை.,  இது விருந்தாயிற்றே வந்தவர்களுக்கு ஓரளவாவது ருசியாக சமைத்துப்போட வேண்டி யூடுப்பாண்டவர் துணையுடன் இருப்பதைக்கொண்டு சமைத்துக்கொண்டிருந்தான்., அப்போது பருப்பு பாயாசத்துக்கு தயார்செய்து கொண்டும் கோபிக்கு உதவிக்கொண்டுமிருந்த ராஜீவிடம் சேட்டா எனக்கு ஒரு ஆசை சேட்டா இதுல ஒரு 3-4 பார்சல் கட்டிக்கொண்டு போயி இங்க உள்ள பிச்சைக்காரங்கள்ட்ட கொடுக்கனும் என்றான், 16730770_878100085663939_910213219_nஅதற்கு அவர் இங்க யார்ட்டனு எங்கனு போயி கொடுக்க., சரிவுடு நாமளே பிச்சைக்காரங்க தானே அதானே இங்க கெடக்கோமென்றார் இல்லை சேட்டா நமக்கு சாப்பிட வழியிருக்குல இல்லாதவங்கனு சிலர் இருப்பாங்கள்ல என்று அப்படியே சிரித்து கடந்தார்கள்.,  பின் சிறிது நேரத்தில் அணில் வந்தான்., அணில் அவர்களுடன் அறையில் தங்கியிருந்தவன் இப்பொழுது அவன் மனைவியுடன் தனியாக இருக்கிறான் அவங்களுக்கும் சேர்த்து தான் சமையல்., கூடமாட ஒத்தாசையா இருந்தான்., கோழியிலிருந்த தண்ணி, தேங்காப்பால், கொதிக்கு விட்ட தண்ணி எல்லாம் கொலப்பி அரிசி போட்ட பிறகு எவ்வளவு தண்ணி ஊத்தனு தெரியாம புலம்பி பின் எப்படியோ தம் போட்டு இறக்கும் போது மணி 1 ஆயிட்டு சுவை பார்க்கும் போது தண்ணி கூடுதல் ஊத்துனதுல பிரியாணிக்கு இருக்க வேண்டிய உப்பை விட கொஞ்சம் கம்மியாகிட்டு மத்தபடி எல்லாம் பக்கா., அணில் பார்சல் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான் கூட ஒரு பார்சல் கொடுத்து அணிலே இத போறப்போ யாராவது பிச்சைக்காரங்க இருந்தா கொடுத்துட்டுப்போனு கோபி கொடுத்துவிட்டான்., பின் வந்தவர்களை கவனித்து, அவர்களிடம் நிறைகுறை கேட்டு போதும் போதுமென சொல்லும்வரை கவனித்து பாயாசம் ரெடியாக தாமதமானதால் அதையும் குடித்து மகிழ்வுடன் கிளம்பும் போது மணி 2.45 இருக்கும். பாயாசம் வைக்க தாமதமானதால் பந்திவைக்க ராஜீவ் வரவில்லை கடைசிவரை சமயலறையில் தான் இருந்தார்., பின்னிருவரும் சிறிது ஓய்வுக்குப்பின் குளித்து ரெடியாகி வந்து சாப்பிட தயாரான போது மணி 3.15 இருக்கும்.,

குளித்து கோபி முதலே வந்ததால் அண்டாவை நோண்ட ஆரம்பித்தான் அவனும் தேடி தேடிப்பார்க்கான் மிச்சமுள்ள பிரியாணில் ஒரு எலும்பைத்தவிர ஒரு துண்டு கறி கூட இல்லை., கோபிக்கோ ஒரே ஆற்றாமை பதட்டம் ச்ச இவ்ளோ தூரம் நம்ம கூட வேளை பார்த்த சேட்டாவுக்கு கறி இல்லையே மனதினுள் புலம்பி அரித்தெடுத்த சின்ன சின்ன துண்டுடன் அவர் தட்டை நிரப்பியிருந்தான்., அவர் வந்து இருந்த மாத்திரம் சேட்டா மன்னிச்சுக்கோங்க கறித்துண்டையே காணோம் நான் எடுக்க எடுக்க வந்ததுல சரி கீழையும் இருக்கும் போலனு விட்டேன் இப்ப பார்த்தா ஒன்னையும் காணோம்னு சொன்னான்., சேட்டா உதட்டால் சிரித்துக்கொண்டே ச்ச ச்ச அதலாம் ஒன்னுமில்லை டா எனக்கு கறில அவ்ளோ பெரிய  ஈடுபாடுலாம் இல்லைடா எனக்கு சோறு போதும்னு சொல்லி சமாளித்தார் கோபியும் பதிலுக்கு இல்லை சேட்டா நானாவது ஈரலாவது சாப்ட்டேன் உங்களுக்கு அதும் கிடைக்கலையே சொல்லி திரும்பவும் மன்னிப்புக்கேட்டு சாப்ட்டுக்கொண்டிருந்தனர்., நீ இவ்ளோ பைசா போட்டு வாங்கி கடைசில வான்கோழி எப்படி இருக்கும்னே பார்க்காம விட்டுட்ல எனச்சொல்லி நக்கல் அடித்துக்கொண்டிருந்தார் அப்போ கோபி ப்ளாஸ்பேக்ல போயி பார்த்து சேட்டா அப்போ வெந்துட்டானு பார்க்க நாம ஒரு துண்டை சாப்ட்டோம்ல அது மட்டும் இல்லைனா வான்கோழி எப்படி இருக்கும்னே தெரியாதுலனு சொன்னதுதான் உண்டு சந்தோஷ சிரிப்பை விட சோக சிரிப்பிற்கு அடர்த்தி அதிகமென்பதை மெய்ப்பிக்கும் வகையில் அறை சிரிப்பில் நிறைந்தது.கோபிக்கோ அப்பாடா சேட்டா மனதாற சிரிக்காரென்ற சந்தோஷத்தில் அவனும் உடன் சிரிக்க ஆரம்பித்தான்., சரி சாப்டவங்கள்ட்ட கேப்போம்னு சொல்லி அணிலுக்கு போன் பண்ணி சாப்பாடு எப்படி இருந்தது கறி எப்படியிருந்தனு கேட்டு நிலைமைய சொல்லி சிரித்துக்கொண்டு இருந்தார்கள்., சமைக்குறது முக்கியம் இல்லைடா எல்லாருக்கும் அளவா பரிமாறுவதில் தான் விருந்தின் சூட்சமமென்று அவர் அறிவுரையே கேட்டவாறே அப்படியே போச்சு மணி இரவு 7 இருக்கும்., அணில் வந்தான் வந்து நானும் போறப்போ பார்த்தேன் டிராபிக்ல பிடிக்க முடியாம போச்சினு சொல்லி அந்த பார்சலை திரும்ப கொண்டு வந்திருந்தான்., ஏன்டா கொண்டு வந்த நீயே இரவு சாப்ட்டிருக்க வேண்டிய தானே என்றபோது ச்ச இவ்ளோ பண்ணி நீங்க சாப்பிடலைனா எப்படின்னான்., சேட்டா கோபியைப் பார்த்து கடைசியில பிச்சைக்காரங்கள்ட்டையே வந்துட்டு என்றார்., சிரித்துத்தள்ளினார்கள்

– கோபி.!?
எப்போதும்வென்றான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s