ராஜலட்சுமியுடன் ஓர் இரவு

மறுநாள் தேர்தல் அலுவலகத்தில் போயே ஆகவேண்டுமென்று அடம்பிடித்து விடுப்பெடுத்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு 20 நிமிடம் முன்பு எக்மோர் வந்தடைந்தான் சிபி. சூளைமேட்லையே கோவில்பட்டிக்கான டிக்கெட் எடுத்துவிட்டதால் இரயிலைப் பிடித்தால் போதுமென்று படபடவென்று ஒடிவந்தான். அங்கு அவனைவிட வேகமாக பலர் போய்க்கொணெடிருந்தனர் 5 நம்பர் ப்ளாட்பார்ம் நோக்கி விரைந்தான் பின் என்ஜின் பக்கம் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் வெளியிலிருந்து நோட்டமிட்டான் ஒரு மணி நேரம் முன்பே இரயில் அவ்விடமிருப்பதால் கூட்டத்தில் அல்லோலப்பட்டது., சரி முன்னாடிப்போயிப் பார்ப்போம் சரிவரவில்லையெனில் இங்கையே வந்துவிடலாமென எண்ணி வேகமாக நடந்தான், அவர்கள் வீடாக நினைத்து ப்ளாட்பாரத்தில் படுத்திருப்பவர்களை, வெயிட்டிங் லிஸ்ட் கம்பர்மேஷன் கெஞ்சல்களை, தள்ளுவண்டிக்காரர்களை வேடிக்கைப்பார்த்து நடந்ததில் அலுப்புத் தெரியவில்லை., முன் 1 1/2 பெட்டியையும் ஒன்றுவிடாது நோட்டமிட்டான் முதலில் பார்க்கும் போதே கண்ணில் பட்டது ஜன்னலோர பேரிளம் பெண் அருகில் அடர்பச்சை நிற சுடியொன்று., அம்மா அப்பாவா இருக்கும் கொஞ்சம் முன்னாடிப்போயி வேற பெட்டரா எதும் இருக்கானு பார்ப்போம்னு போனான்., சிபிக்கொரு பழக்கம் இரயில் பயணமென்றால் அலுப்பு தெரியாது இருக்க நேரம் போக எங்கு பாவைகள் குத்தவைத்துள்ளார்களோ அங்கேயை விஜயம் அங்கே ஒற்றைக்கால் வைக்க மட்டும் இடமிருந்தாலும் அங்கு ஏறியிருப்பான் அவ்வாறாக அன்றும் முன்பின் பார்த்தும் ஒன்றும் வசப்படாததால் அடர்பச்சையே துணையென்று அவளிருக்கும் ஜன்னல் அருகில் நின்று நோட்டமிட்டான். அப்போதுதான் கண்டான் அவளுக்கு எதிர்புறமும் கருப்பு சுடியில் வேறொரு பெண்ணும் இருக்கிறாளென்று., உடனே சந்தோஷம் தாளாது தாமதிக்காது படி சொந்தக்காரர்களைத்தாண்டி ஏப்பா உள்ள இடமில்லை அந்த கம்பார்ட்மெண்டுக்கு போ, ஏ பார்த்துப்போ என்ற இரயிலுக்கே உரித்தான வார்த்தைகளை கடந்து உள்ளே சென்றான் பெட்டியின் நடுப்பகுதி சீட்டில் அவள் அமர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பின் தன் இருப்புக்கு வழி தேடினான். எங்க அங்கு உட்கார வழியேயில்லை கொஞ்ச நேரம் நின்றே ஆக வேண்டிய நிலை சிபிக்கு முன்பதிவில்லா ரயில் பயணம் அத்துப்பிடி மிஞ்சிப்போனால் செங்கல்பட்டு வரை மக்கள் என் இடம், என் கணவன் இடமென்று பிடித்துவைத்திருப்பார்கள் பின் யார் யார் பக்கத்தில் இருக்கிறார், எவர் கை எங்கு படுகிறது என்பதை கவனிப்பதற்கெல்லாம் நேரமில்லை பாரபட்சமில்லாத ஜன்னல் காற்று பிறந்தபோது தொட்டிலில் ஆடியது பின் நினைவு தெரிந்து இப்பொழுதுதான் அப்படியொரு ஆட்டம் அச்சுகத்திலேயே கிடைக்கும் இடத்தில் நீட்டிமடக்கி இருந்தவாரே உறங்கிப்போவார்கள்.,

தூங்காத ஒருவன் இருந்தால் அவனே உலகின் மிகப்பெரும் பாக்கியசாலி இந்த இடத்துக்குள்ளையெல்லாம் தூங்கிடலாமா, இப்படியெல்லாம் தூங்கலாமா விதவிதமான மனிதர்கள் இவ்வகையில் சிபி அதிர்ஷ்டக்காரன் அவன் விழித்திருப்பதின் காரணம் வேறாக இருப்பினும் இவ் அழகியலில் பட்டம்பெரும் அளவு பரிட்சயம்., அவ்வாறாக 4 பேர் இருக்கும் இருக்கைக்கு எதிர்புறமுள்ள 2 இரண்டு இருக்கையில் எதிரெதிராக ஒரு முதிர் ஆட்சிஅய்யர். அய்யர் இருக்கும் சீட்டில் சாய்ந்தவாரு நிற்பதற்காக இடத்தை தேடிக்கொண்டான்., பையில் துணிகளுடன் சர்ட்டிபிகேட்ஸ் பாஸ்போர்ட் இருப்பதால் கண்பார்வையில் படுமாறு தொங்கவிட்டிருந்தான். பின் சுற்றி ஒரு நோட்டம் அவளிருப்பதற்கு மேல் இருபுறமும் காலேஜ் பையன்கள் போல் பாட்டு போட்டுக்கொண்டும் கத்தி சிரித்துக்கொண்டும் இருந்தனர். அவள்புறம் 3 ஆண்கள், அவள், பின் அந்த அம்மா., அவள் எதிர்புறமுள்ள இருக்கையில் 4 ஆண்கள் ஜன்னலோரம் அந்த கருப்பு சுடிப்பெண்.கீழே யாரும் சிபி வயதுடையவர்கள் இல்லை இதில் நல்லதென்னவென்றால் அவர்கள் அனைவரும் உறங்கிப்போவார்கள்., அடர்பச்சை யின் அருகில் இருந்தவர் ஏற்கனவே கண் அசந்திருந்தார் அந்த அம்மா வெளிப்புறம் பார்த்துக்கொண்டிருந்தார் இவள் எதிருள்ளவளிடம் பேசிக்கொண்டும் அருகில் பேசிக்கொண்டிருப்பதை கேட்குக்கொண்டும் இருந்தாள்.
இப்போது சிபியின் பார்வை அவளை மேலிருந்து கீழ் ஆராய்ந்தது அடர்பச்சையில் பட்டு ஜரிகை சுடி மேலொரு துப்பட்டா காத்துக்கு விலகாமல் இருக்க ஓரு கையை அதைப்பிடிக்க பணி ஏவியிருந்தால் திராவிட நிறம் திராவிடர்களின் ரசனைக்கே உரித்தான உடல்வாகுடன் இருந்தாள்., கழுத்தை துப்பட்டா மறைத்திருந்ததால் காலை எட்டிப்பார்த்தான் கால் சீட்டுக்கு அடியிலிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை சரி இப்ப என்ன கல்யாணம் ஆகியிருந்தா பார்க்க மாட்டியா சிபி என்று தனக்குள்ளையே சொல்லி உள்ளூற சிரித்துக்கொண்டான்., வண்டி நகர ஆரம்பித்தது.

20140911002

கண்கள் எங்கு போயினும் வம்படியா இழுத்துக்கொண்டுவந்து அவள் பக்கம் ஒரு ஓரப்பார்வை பார்த்து பின் வேறிடம் நோக்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தான்., அவள் முன்னுள்ளவள் பக்கத்து அம்மாவிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்தாள் 40 பேர் இருக்க வேண்டிய பெட்டியில் 60-80பேர் இருப்பார்கள் முக்கியமானது அனைவரும் பேசிக்கொண்டிருப்பார்கள் இல்லையெனில் அவர்களின் மொபைல் பேசிக்கொண்டிருக்கும் இரைச்சல் ரசிக்கத்தக்க இருப்பது அங்கு மட்டும் தான்., இருந்தாலும் கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது சிபிக்கு அங்கிட்டு இங்கிட்டு நகட்டி இருபுறமும் கீழ உட்கார்ந்திருந்தவங்க பரிதாபபட்டோ கோபப்பட்டோ கொஞ்சூண்டு நகர்ந்ததுதான் உண்டு சிபி சமைஞ்ச பெண் உட்கார்வதைப்போல் முட்டிமடக்கி கையால் அழுத்திப்பிடித்து அமர்ந்தான் கொஞ்சம் கூட முன்னாடி நீட்ட முடியாது சம்மளம் போட்டால் அருகில் உள்ளவர்கள் மேல் கால்படும் ஒரே வழி நிமிர்ந்து உட்கார்ந்தால் கொஞ்சம் பிரியாக இருக்கும் பின் முதுகு வலிக்குறப்போ முன்னாடி வந்துக்க வேண்டியது இதற்கு நடுவில் பாத்ரூம் போக குழந்தைகள் பெண்களென்று அணிவகுப்பார்கள் அவர்களுக்கு எழுந்து நிற்தல் வேண்டும் சிலர் தரையில் கால்படாமலே சீட் மீதே காலைவைத்து நடக்கும் சாகசமும் நடக்கும் அப்போலாம் என்னதான் வலிச்சாலும் கண்கள் அங்க போறதை அவனால கூட தடுக்க முடியல., ஆனா அவ சட்ட பன்றதாவே இல்ல சரியென்று புத்தகமொன்றை கையிலெடுத்து படிக்க ஆரம்பித்தான் சிபியின் இயல்பு இப்படி படிப்பதினாலையே பல பயணநண்பர்களை அவர்கள் அனுபவங்களை கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறான். ஐந்தாரு பக்கங்களை புரட்டியிருப்பான் கண்கள் அவளைத்தேடியது தாம்பரமும் வந்தது. வண்டி நிற்க கூட இல்லை சடசடவென்று ஏறிய ஒரு பயணி ண்ணா கொஞ்சம் கொஞ்சம்னு எல்லாத்தையும் தள்ளிட்டு வந்தாரு அவர் வர்ற வேகத்தை பார்த்தா ரொம்ப பேர் ஏறுவாங்க போலனு நானும் எந்திச்சிட்டேன் என்னைத்தாண்டி எனக்கு மேல லக்கேஜ் வைக்கும் இடத்திலுள்ள பெட்டி பண்டல்களை நெருக்கமாக தள்ளிவிட்டு 3/4 வாசி நீட்டுவதற்கு தோதாக சரிசெய்துவிட்டு அங்கே ஏறி படுத்துக்கொண்டார் என் பேக் நல்லா வை கீழத்தள்ளிராதிங்கனு சத்தம் போட்டவர்கள் முதற்கொண்டு எல்லார் முகத்திலும் அதிசயிக்கும் சிரிப்பு சிபிக்கும் தான்., திரும்பி அவளை பார்த்தா போது தான் உணர்ந்தான் அவளும் எட்டி அவரின் சாகசத்தை ரசித்துக்கொண்டிருக்கிறாளென்று பார்த்து முடிக்கும் தருணத்தில் சிபியின் கண்ணையும் பார்த்து திரும்பினால் போதாதா சிபிக்கு போதாதா புத்தகத்தை பையில் போட்டுவிட்டு கை காலை ஆட்டி ரீஎனர்ஜி ஆனான். சிபியென்றல்ல அந்த முட்டக்கண்ணில் புருவம்மேலேற அவள் பார்த்தால் விழாத ஆண் ஜென்மம் இருப்பதாக நம்பவில்லை, அப்படியொரு கண்ணழகி கொஞ்சம் கண்ணம் அழகியும் கூட.,அப்பப்போ மேலுள்ள காலேஜ் பசங்க எதிர்ப்பக்கமுள்ள கருப்புச்சுடி எல்லாரையும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டுருந்தான்., செங்கல்பட்டு தாண்டி சென்னைக்கு மிக அருகிலுள்ள மதுராந்தக வாசி மேலிருந்து கீழிறங்கி போனார் அவ்விடம் போனால் அந்த பசங்களுடன் ஜாலியாக ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கலாம் தான் ஆனால் சிபியின் உள்மனசு சொல்லிச்சி இங்கையே நில்லு அதவிட நல்ல அனுபவம் வருதுனு., அவனும் நின்னான் பார்த்தான் உட்கார்ந்தான் பார்த்தான் நடுவில் கொஞ்சம் அசந்தான் எழுந்தான் பார்த்தான் அவள் கண்ணும் அப்பப்போ வரும்., வந்தது மேலுமருவத்தூர் வெளில ஓடு ஓடுனு இரயில் சத்தத்தை மீறிய சத்தம் கொய்யால இன்னமும் கூட்டமா முடியாதுடா சிபி ஒரு இஞ்ச் நகர்ந்துடாத செத்த என்று ஒரு மரண பீதியில் ஜன்னல் வழி பார்த்துக்கொண்டிருந்தான்., அவனைத்தட்டி தம்பி கொஞ்சம் எந்தினு ஒரு வாய்ஸ் யார்ரானு பார்த்தா அவ பக்கத்துல உட்கார்ந்த அந்த அம்மா & அவளுக்கு எதிர்புறம் அந்த கருப்புசுடி பக்கத்துல இருந்தா தாத்தா இறங்கினார்கள்., அடங்கொய்யால அப்போ அது அவங்க அம்மா இல்ல போலனு இவனும் பேக்கத்தூக்கிட்டு அவள் எதிர்புறம் அதாவது அந்த கருப்புசுடி பக்கம் நெழிந்து கூச்சசுபாவம் உள்ளவன் உட்கார்வது போல் நடித்து உட்கார்ந்தான்., அவள் அந்த அம்மாயிருந்த ஜன்னலோரம் போயிருந்தால் ஆனா அவள் கண்கள் சிபியின் நடத்தை கவனித்துக்கொண்டுதான் இருந்ததன., அவ்ளோ பக்கத்தில் அவள் கண்களை மேயும் ஒரு வாய்ப்பு சிபிக்கோ முகமெல்லாம் வாயாக வாய்பூரா சிரிப்பாக சந்தோஷத்தில் முகம் குளிர்நீரில் நனைத்த பூவாட்டம் மலர்ந்தது., சுத்தி எந்த சத்தமும் அவன்காதில் விழவில்லை தூரமாய் கேட்கும் ராஜாசார் பாட்டிலும் ஜன்னலோரம் அடிக்கும் வேகக்காத்திலும் ரயில் தாலாட்டிலும் அவள் அழகிலும் லயித்துப்போயிருந்தான்., அவள் பார்க்கும் போது இவனும் இவன் பூனைக்கண்ணை எவ்ளோ முடியுமோ அவ்ளோ விரித்துக்காட்டி அவள் கவனத்தை தன்பக்கம் திருப்பினான் அவள் பார்க்காத நேரம் சுடிதாருக்கு மேல் துப்பட்டாவையும் தாண்டித்துருத்தி நிக்கும் அவள் தொப்பையையும் தொப்பையின் மேலும் பார்த்துக்கொண்டிருந்தான்., குளிர்ந்ததோ அல்லது காற்றில் ஆடிய முடியை அடக்க முடியலையோ ஜன்னலை மூடிவிட்டாள் அந்த கண்ணாடி ஜன்னலை தலையணையாக்கி சாய்ந்து கொண்டாள் ஆனால் தூங்கவில்லை சிபியும் கையை நீட்ட காலை நீட்ட வென்று அவளை தூங்க விடுவதாய் இல்லை இதற்கு நடுவில் அவளருகில் இருப்பவரையும் அவனருகில் இருப்பவளையும் தொந்தரவு செய்யாது லாவகமாய் செய்கை செய்தல் வேண்டும் செய்தான் சாதித்தான் அவளும் எவ்ளோ நேரம் தான் சிபியை காணாது மாதிரி நடிப்பால்., கண்ணோடு கண்பேச ஆரம்பித்தால் இவனும் உன் கண்கள் அவ்ளோ அழகு மூடாத ப்ளிஸென்று முகத்தால் கெஞ்ச ஆரம்பித்தான் அவளும் புருவம் தூக்கி முட்டைக்கண்ணை விரித்தாள் முகம் சிரித்தது.,, அவள் தூக்கத்தில் கண்மூட முயற்சித்தால் கூட காலால் இடித்து எழுப்பிவிட்டான் இதன் நடுவில் திண்டிவனம் தாண்டி விழுப்புரம் ஜங்ஷன் வந்தடைந்தது இரயில் ஒரு 15 நிமிட கிராஸிங்., டீ காபி சப்பாத்தி சவுண்ட்ல பக்கத்துல தூங்கினு இருந்த கருப்புசுடி முதற்கொண்டு எந்திச்சிட்டா சிபி அவளை சட்டை செய்வதாய் இல்ல அவனவளிடம் டீ வேணுமானு கேட்டான் சைகையில் கண்ணால் வேண்டாமென்றால் இவன் மட்டும் ஒரு டீ குடித்து தெம்பாகிக்கொண்டான் இரயிலும் புறப்பட்டது.

சிபி திரும்பவும் ஆரம்பித்தான் சத்தம் வராது வாயை மட்டும் அசைத்துக்கேட்டான் இது உங்க அப்பாவானு சற்றுநேர யோசனைக்குப்பின் ச்சீஇல்ல என்றாள்., அதுவரை கண்டுகொள்ளாதவன் பின் அவர் கால் எங்க இருக்கிறது கை எங்க படுகிறதென்று பார்க்க ஆரம்பித்தான் ஒருகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் நடுவில் கால் வைத்துபிரித்தான்., அவள் தொடையில் பட்டும்படாது கால் நீட்டியிருந்தான் அவள் காலையும் அவன்புறம் நீட்டிக்கொள்ளுமாறு பணித்தான் ஜாடையில் பரவாயில்லை பரவாயில்லையில்லை என்று தலையாட்டிக்கொண்டே வைத்தும்விட்டால் சிபிக்கும் கருப்புசுடிக்கும் நடுவில்., உன் பெயரென்ன என்றான் மொழி ஜோதிகாவை மிஞ்சும் சைகை பாஷை அவள் புரியலையென்று தலையாட்டிவிட்டாள் திடீரென்று அருகிலிருந்த கருப்புசுடிக்காரி நான் வேணா அந்தப்பக்க்ம் போயிடட்டுமா அவங்களை இங்க உட்கார வச்சிக்கிருங்களா என்றாள் பக்கென்று இருந்தாலும், சிபிக்கு சிரிப்பு தாங்கல பதிலாய் ம்ம் எனக்கு ஓக்கே அவங்க வரனுமே என்றான்., பின் சிபி தன் பேண்ட் பாக்கெட்டில் தடவி சூளை டூ எக்மோர் வரை வந்த லோக்கல் டிக்கெட் பின்புறம் என் பேர் சிபி உங்க பேர் என்னனு எழுதி அவள்ட்ட கொடுக்க கைய ஆட்டுனான் மேல பசங்க வேற சிபியின் செயலை பார்த்துக்கொண்டே இருந்தனர் போதாக்குறைக்கு பக்கத்து கல்லுளிமங்கி வேற என்னசெய்வதென்று யோசித்த சிபி உட்கார்ந்தவாரே கையை கட்டினான் இடதுபுறம் கை இவன்புறம் நீட்டியிருந்த அவள் கால் மீது பட்டது அந்த பேப்பரை அவள் விரல் இடுக்கில் வைத்தான் அவளும் விரலால் அழுத்திப்பிடித்து காலைபின்னிழுத்து கீழ் குனிந்தெடுத்து படித்து பின் சொன்னால் சைகையில் சிபிக்கு புரிந்தபாடில்லை பேனாவை நேரடியாக அவள் மடியில் போட்டான் அவள் ராஜலட்சுமி என்று எழுதி பேனாவையும் பேப்பரையும் அவன் கையிலையே கொடுத்தாள்., அவள் கண்கள் சொக்கின மணி பார்த்தேன் 12.40 மக்கள் சத்தமும் கொஞ்சம் அதிகமானது 1 மணி இருக்கும் திருச்சியும் வந்தது., அவள்புறம் இருந்த இன்னொரு ஆண் இறங்க அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் உட்கார ஜன்னலோரம் நெரிக்கப்பட்டால் ராஜலட்சுமி அருகிலிருந்தவன் உடல் மிகையாக உரச அவளும் நெளிய நீங்க இங்க வாங்க நான் அங்க போறென சொல்லி சிபி இடம் மாறிக்கொண்டான்., சிபியின் செய்கை பிடித்திருந்தநோ என்னவோ அதன்பின் சீட்டின் முன் வந்து நேரடியாகவே பேச ஆரம்பித்தாள்., திருச்சியில் பின்னொரு டீ குடித்து தெளிவானான் சிபி., இரயில் புறப்பட்டது இவர்களும் முன் வந்து பேச ஆரம்பித்தார்கள் நான் சிபி எட்டையபுரம் பக்கத்துல ஊரு சென்னையில் பணிபுரிவதாகவும் இன்னும் 15 நாளில் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் சொன்னான் அவளும் தான் சென்னை எக்மோர் அருகிலுள்ள நாடார் முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளியில் ஆசிரியராய் பணிபுரிவதாகவும் பூர்விகம் குளத்தூரென்றும் சென்னையில் அக்கா வீட்டிலிருந்து பணிக்கு செல்வதாகவும் தேர்தலுக்காக 3 நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறாளென்றாள் கூறினாள்., சிபிக்கோ ஒரே ஆச்சர்யம் நீங்களா டீச்சரா நீங்க டீச்சரானு அவளும் சிரித்துக்கொண்டே ஏன் என்னப்பார்த்தா டீச்சராட்டம் தெரியலையானு இல்ல இல்ல உடம்புவாக்குல ஒரு குறையுமில்லை வாய்ஸ் தான் கிராமத்து வாய்ஸா இருந்ததா அதான் டவுட்டென்று குழைந்தான்., ச்ச இவ்ளோ நாள் இவ்ளோ பக்கத்துல இருந்துட்டு இந்த கண்களை எப்படி பார்க்காம மிஸ் பண்ணுனேனு சொல்லி நொந்துகொண்டான்., சரி நம்பர் தாங்க என்றான் என்ட்ட நம்பர் இல்லையென்றாள் அட நம்புறமாதிரி பொய் சொல்லுங்க டீச்சர் மொபைல் இல்லாமலானு நம்பாது திரும்ப திரும்ப கேட்டான் பின் பொறுமையிழந்து உங்க பை எங்கனு கேட்டான் அங்கதான் உங்க காலுக்கு கீழ இருக்கு பாருங்க என்றாள் அவனும் பார்த்தான் இல்லை., அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு கேட்டான் ஏன் இப்படி இந்தகாலத்துல மொபைல் இல்லாமலென்று இல்ல மாமாக்கு மொபைல் யூஸ் பண்ணா பிடிக்காது அதான் அங்க அக்கா மொபைல் ஸ்கூல்ல யூஸ் பண்ணக்கூடாது வீட்டுல போனா அம்மா மொபைல் யூஸ் பண்ணிப்பேனென்றாள் சிபிக்கு ஒருவித கஷ்டம் சூழ்கிறது இருந்தும் விடாது அவளது பையிலிருந்து ஒரு தாளை எடுத்து அவன் நம்பர் எழுதி இதான் என் நம்பர் வீட்ல அ அக்கா நம்பர்ல இருந்து கூப்பிடு நான் காத்திருப்பேன் பண்ணனும் சரியா என்று உத்தரவு தொனியிலையே சொன்னான் அவளும் ம்ம்ம் கொட்டி வைத்தாள் பின் அவளும் சாய்ந்தால் சிபிக்கும் கண் அசந்தது ஜன்னலோரம் சாய்ந்து நிமிடத்துக்கொருமுறை மூடித்திறந்து அவள் சொன்னதையெல்லாம் யோசித்துக்கொண்டே அவளையும் ரசித்தான்., சிபிக்கு ஒரே வருத்தம் நேரம்போக போக பயணம் முடிந்துவிடுமே இது நீண்டால்கூட தூத்துக்குடி தானே கடைசி என்ன செய்யவென்று யோசித்து வெம்பினான்., கண் அயர்ந்த அவளை காலால் மிதித்து தூங்காத விழித்திரு என்றான் அவள் சற்று கோப முகம் காட்டினாள் அப்போது மணி 2.45 இருக்கும் என்ன யோசித்தானே திடீரென்று அவள் பையிலிருந்து பேப்பரை எடுத்து “இனி வரும் இரயில் பயணங்களில் ஜன்னல் வழித்தென்றலோடு உன் நினைவுகளும் என்னை வருடும்” பை சிபி னு போட்டு அவள்ட்ட கொடுத்தான் என்ன மூட்ல இருந்தாளோ அய்ய்யயய இதலாம் ஓவர் ஆமா என்றாள். , சற்றும் எதிர்பாராத பதில் வருத்தமிருப்பினும் சிரித்தான் அடுத்த ஒரு மணி நேரம் இருவரும் தூங்கியே விட்டார்கள்., மணி 3.45 மதுரை ஜங்ஷன் வந்தது விழித்தான் டீ குடித்தான்
அவன் புறம் இருவர் இறங்கினர் அவள் புறம் ஒருவர் இறங்கினார் காலில் மிதித்து எழுப்பி இங்க வா என்றேன் சற்றும் யோசிக்காது தள்ளி உட்காரு என்றாள் சிபியும் தள்ளி அவளை ஜன்னலோரம் அமர்த்தினான் உடல்உரசினாலும் அவள்மீது எந்தவொரு வக்கிர எண்ணமும் படறவில்லை மாறாக ராஜலட்சுமியிடம் என்னை யார்ணே தெரியாது என்ட்ட பேசுற எல்லாத்தையும் சொல்ற என் பக்கத்துல தைரியமா உட்கார்ந்திருக்கனு பாசம் வழிந்தோடக்கேட்டான் அவளோ தெரியலையே என்றாள் ஆயிரம் அர்த்தம் பொதிந்தது பதில் அவள் மட்டும் அறிந்தது., அக்கணம் சிபிக்கு காமமில்லாது அவளை கட்டியணைக்க தோன்றியது அதற்கான இடம் அதுவில்லையென உணர்ந்தவன் உன் கைய பிடிச்சிக்கவா என்றான் ம்ம்மம் என்றாள். விரலை மட்டும் தொட்டான் கொஞ்ச நேரம்தான்ல அடுத்த எப்ப பார்க்கவோ எப்படியாவது எனக்கு வீட்டுக்குப்போனதும் கால் பண்ணிடுனு கெஞ்சாது கெஞ்சினான்., கொஞ்ச நேரம் தான் தூங்காத உன் கண்ணைப் பார்த்துட்டே இருக்கனுமென்று அவளை தூங்கவே விடல விருதுநகர் தாண்டியிருக்கும் ராஜலட்சுமி வயித்தை பிடிக்க ஆரம்பித்தாள் என்ன ஆச்சி என்றான் ஒன் பாத் போகனும் என்றாள் சரி போய்ட்டு வா என்றான்.

அவளும் மெதுவாக கிளம்பினாள் சீட்டுக்களைத்தாண்டி உறங்கியிருந்தவர்களை தாண்டிப்போயி போன வேகத்திலேயே திரும்பி வந்து சிபி நின்றிருந்த இடத்தில் நின்று குழைந்தாள் என்னாச்சுனு கேட்டான் சிபி கூட்டமா இருக்கு யாரும் நகர மாட்டிக்காங்கனு சொன்னா ம்ம்ம்ம்ம் சரி என்றான்., சும்மா இருக்கும் போது அப்பப்போ பெரியார் படிச்சதன் விளைவு டேய் வயித்தப்புடிச்சிட்டு நிக்க முடியாம நிக்கா கூப்ட்டு போனு மனசு சொல்லுது மூளையோ பெண்களாத்தான் முன்னேறனும் இந்நேரம் நான் இல்லைனா என்ன பண்ணுவா அதும் போக எதுத்தாப்ல உள்ளவ அவ பிரண்டா இருக்குமோ நாம அவ பின்னாடி போனா இவ நம்ம பர்ஸ் சர்ட்டிபிகேட்லாம் எடுத்துட்டானு மூளை பேசுது கூடவே திடீர்னு வக்கிரமா சில எண்ணங்கள் கடைசிவரை சிபி போகவே இல்லை அந்த பாவ முகத்தை கண்டுக்கலைனு கூட சொல்லலாம் அவளும் திரும்ப வந்து உட்கார்ந்துவிட்டால் ஏன் போகலை போக வேண்டிய தானே தள்ளுங்கனு சொல்லிட்டுனு இலவச ஆலோசனைகளை அள்ளித்தெளித்தான் அவள் விடு நான் அப்புறமா போய்க்கிறேனு முடித்தாள் அதன்பின் அவள் பெரிதாய் எதும் பேசிக்கவில்லை.

சிபி தான் கோவில்பட்டி வரப்போகுது இறங்கனுமா நானும் தூத்துக்குடி வரை வரட்டுமா என்றான் அதலாம் வேண்டாம் நீ போ என்றாள் சரி நீ கால் பண்ண மறந்துடாத நான் எதிர்பார்த்துட்டே இருப்பேனென்று சொல்லிட்டு கையை இறுக்கப்பிடித்து தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து I miss you என்று சொல்லி கோவில்பட்டியில் இறங்கி விடைபெற்றான்.

அன்றைய நாள் போன்கால் வரவில்லை அந்த வாரம் வரைகூட வரவில்லை மறுமுறை சென்னை போனபோது அப்பள்ளிக்கு ப்ராங் கால் செய்து கேட்டதில் அப்படி யாரும் இங்கு இல்லையென பதில் வந்தது. 10-15 நாள் அவள் நினைவாக நடந்தான் பின் மறந்தான் ஆனால் அச்சம்பவம் நடந்து 5 வருடங்கள் ஆகியும் இன்றும் இரயிலை பார்க்கவோ பயணிக்கவோ ஏன் எழுத்தாக கண்டால் கூட முதலில் நினைவில் வருவது ராஜலட்சுமி மட்டும் தான் கூடவே அவளிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வியும்

அன்று அவ்வளவு நெருக்கமாக இருந்தும் ஏன் எனக்கு போன் பன்னலையென்று?

பின் அவனே பதிலை உருவாக்கிக்கொண்டான், அந்த கவிதையை சொல்லியிருக்கக்கூடாது, அவளை ஒன் பாத் போக கூட்டிச்சென்றிருக்க வேண்டும்,அவளை சந்தேகப்பட்டிருக்கக்கூடாது.
இப்படியாக பதில் கிடைத்த ஒருநாளில் அவள் நினைவுகளை எழுதி பொக்கிஷமாக்கிக்கொண்டிருந்தான்.

– கோபி.!?
எப்போதும் வென்றான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s