பட்டுக்கோட்டையார் சொன்னார்/சொல்கிறார்/சொல்லிக்கொண்டே இருப்பார்

குழந்தைகளுக்கு : படிப்பு தேவை-அதோடு உழைப்பும் தேவை-முன்னேற படிப்புத் தேவை அதோடு உழைப்பும் தேவை!  காசு உண்மை தெரியும் உலகம் தெரியும் படிப்பாலே-நம் உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே

பெண்களுக்கு : இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே இதுதான் உலகம், வீண் அனுதாபம் கொண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே

ஆண்களுக்கு : கண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும் காதலும் வாழ்வும் தொடர்ந்திடும் கண்ட கண்ட பக்கம் திரிஞ்சா கையும் காலும் வாழ்வும் துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்

ஏழைகளுக்கு : கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே என் காதலிப் பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்வதென்றும் புரியலே ஏழைக்கும் காலம் சரியில்லே

மோடிக்கு : அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும். அதன் அழகை குலைக்க மேவும். கொம்பு ஒடிந்து, கொடியும் தொலைந்து குரங்கும் விழுந்து சாகும்.
சிலர் குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா.

பக்தாள்ஸ்க்கு : உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் உளறியென்ன கதறியென்ன ஒன்றும் நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா?

கடைசியாக உங்களுக்கும் எனக்கும் (இணைய போராளிகளுக்கு) : பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அனேக வித்தியாசம் புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம் புவியை மயக்கும் வெளிவேஷம்

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.!?

Leave a comment