பட்டுக்கோட்டையார் சொன்னார்/சொல்கிறார்/சொல்லிக்கொண்டே இருப்பார்

குழந்தைகளுக்கு : படிப்பு தேவை-அதோடு உழைப்பும் தேவை-முன்னேற படிப்புத் தேவை அதோடு உழைப்பும் தேவை!  காசு உண்மை தெரியும் உலகம் தெரியும் படிப்பாலே-நம் உடலும் வளரும் தொழிலும் வளரும் உழைப்பாலே

பெண்களுக்கு : இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே இதுதான் உலகம், வீண் அனுதாபம் கொண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே

ஆண்களுக்கு : கண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும் காதலும் வாழ்வும் தொடர்ந்திடும் கண்ட கண்ட பக்கம் திரிஞ்சா கையும் காலும் வாழ்வும் துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்

ஏழைகளுக்கு : கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசுபோன இடம் தெரியலே என் காதலிப் பாப்பா காரணம் கேப்பா ஏது சொல்வதென்றும் புரியலே ஏழைக்கும் காலம் சரியில்லே

வைகோக்காக : வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே!

பன்னீர்செல்வம்/ஸ்டாலினிற்காக : இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா..

உடன்பிறப்புகளுக்கு : திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

ரத்தத்தின் ரத்தங்களுக்கு : சூதாட்டம் ஆடும் காலம் பல மாறாட்டம் செய்து போகும்    வாதாடி என்ன லாபம் துயர் மலிந்தோர்க்கு எதுநியாயம்

ஜெயலலிதாவுக்கு : பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும் ஆபத்திலே சிக்கி அழிந்தார்களானாலும் அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா! அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் முடிவில் எவருக்குமே தெரியாம ஓடினார் மனதில் இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்

கலைஞருக்கு : தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாரிக்க சொல்லெல்லாம் வெஷமிரிக்கி கேளுங்கோ – இதர் நெல்லார்க்கி பொல்லார்க்கி அல்லா நடுவேரிக்கு எல்லாம் வௌக்கிப் போடும் பாருங்கோ

திருமா/சீமான்/அன்புமணிக்கு : சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ

மோடிக்கு : அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும். அதன் அழகை குலைக்க மேவும். கொம்பு ஒடிந்து, கொடியும் தொலைந்து குரங்கும் விழுந்து சாகும்.
சிலர் குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா.

பக்தாள்ஸ்க்கு : உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் உளறியென்ன கதறியென்ன ஒன்றும் நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா?

இளைஞர்களுக்கு : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா!

நல்லகண்ணு/சகாயத்திற்கு : எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக்குது அதை எண்ணி எண்ணித் தொழிலாளர் நெஞ்சு கொதிக்குது வஞ்சனைக்கும் அஞ்சிடோம் பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம் பட்டினிக்கும் அஞ்சிடோம் நெஞ்சினைப் பிளந்தபோதும் நீதிகேட்க அஞ்சிடோம் நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்

நன்றி கெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம் நாவினிக்க பொய் யுரைக்கும் பேரை நம்பமாட்டோம் என்று கூறுவோமடா ஒன்று சேருவோமடா வீறுகொண்டு சிங்கம் போல் முன்னேறுவோமடா

விவசாயிகளுக்கு : காயும் ஒருநாள் கனியாகும் நம் கனவும் ஒருநாள் நனவாகும் உடல் வாடினாலும் பசி மீறினாலும் வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோமே

கடைசியாக உங்களுக்கும் எனக்கும் (இணைய போராளிகளுக்கு) : பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அனேக வித்தியாசம் புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம் புவியை மயக்கும் வெளிவேஷம்

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.!?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s