8

கல்லூரி முடித்த தருணம் 3மாதம் முன்பு புராஜெக்ட் செய்ய சென்னை வந்தபோது ஏற்பட்ட பழகத்தின்பேரில் நண்பர்கள்தம் தொழில்முனைப்பில் ஒரு புது முயற்சிக்காக நண்பர் ஒருவர் பணம் போட(CFO) இன்னொருவர் வழிநடத்த(CEO) மீதமுள்ள மூவர் (1Senior + 2 Junior)புரோகிராமராக “தொழில்” படித்து வேலை செய்வதென முடிவெடுத்து Android Game Developing கம்பெனி தொடங்க கிளம்பினோம்.,

என் கண்ணிற்கு சொர்க்கமாக தெரிந்த மைசூருக்கு. 2 அறையுள்ள ஒரு வீடு ஒன்று சமையலறையாகவும் மற்றொன்று ஆபிஸ்+பார்+சாப்பாட்டு அறை+அலுவலக அறை என்று அனைத்திற்குமாக இருந்தது. மூவரில் ஒருவருக்கே அதும் ஓரளவுக்கே Game Development பற்றித்தெரியும் அவரது அறிவுரையின் பேரில் நாங்களும் படுத்து+சாப்ட்டு & கொஞ்சமா படித்தும் கொண்டிருந்தோம் 3 மாதம் போனது மைசூரின் முக்கியமான இடங்களை எல்லாம் சுற்றியிருந்தோம்., புதுப்படங்களையெல்லாம் பார்த்திருந்தோம்., எஸ்ட்டு என்று கன்னடத்தில் ஒரு வார்த்தை கற்றுக்கொண்டிருந்தோம், நான் சமைக்க கற்றுக்கொண்டேன்., முகப்புத்தக அறிமுகம் அங்கு தான் கிடைத்தது. சம்பளம் வாங்காத வேலை / பணம் போடாத தொழில் எங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும். நடுநடுவே வேலையும் பார்த்தோம் இல்லையென்பதற்கில்லை ஆனாலும் நினைத்தது நிறைவேறவில்லை. ஆனால் நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக மிகவும் ஸ்டைலிஷாக CEOவால் ஏமாற்றப்பட்டிருந்தோம்.

நாங்கள் அங்கிருந்தது ஒரு குளிர்கால மாதங்களென்பதால் சிரித்தவாறே கடந்திருந்தோம். ஆனால் ஊர் திரும்புவதற்கு 3 நாட்கள் முன்பு என்ன செய்வதென்று ஒரு தேடல் பதட்டம் வழக்கம்போல நானும் CFOவும் சரக்கடித்தோம் அவர் புலம்பினார் நான் கொடூரமாக புலம்பினேன் இறுதியில் அவருக்கு தெரிந்த வலைதள உருவாக்கத்தின்(Web Design) அடிப்படைகளை சொல்லித்தருவதாய் சொன்னார். அதிசயிக்கும் விதமாக காலையில் அவரும் மறக்கவில்லை நானும் மறக்கவில்லை அவரது உதவியில் ஒரு 3 நாட்களில் வலைதள உருவாக்கத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டேன். உடன் வந்த நண்பன் ஏற்கனவே வேறொரு இடத்தில் பார்த்த வேலையையும் விட்டுவிட்டு தான் வந்தான் அவன் வேலை அனுபவத்தில் அடுத்த வேலைக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை., எங்கள் இருவருக்கும் தெரிந்த ஒரு நண்பனின் உதவியில் (அவனும் எங்களுடன் படித்தவனே)அவனுடைய தோழியின் அலுவலகத்தில் அவளுடைய பரிந்துரையில் இதே வலைதள உருவாக்க பணி வாங்கித்தருவதாய் சொன்னான்., மூன்று நாள் படித்த நம்பிக்கையில் நண்பன்/நண்பனின் நண்பி எல்லோரும் இருக்கும் நம்பிக்கையில் சென்னை வந்தடைந்தோம். இரண்டு நாள் முடிவில் என்னுடன் வந்த நண்பன் நான் வேற துறையை தேடிக்கிறேன்டா இது வேண்டாமென்ற தெளிவான முடிவை எடுத்துவிட்டான்., எஞ்சியிருப்பது நான் அந்த நேர்காணல் ஒருவித உத்வேகத்துடன் சென்று சேர்ந்தேன் படித்துமுடித்த பின்பான என் முதல்நேர்காணல் I coming from ப்ளா ப்ளா ஒப்புவித்து அந்த பெண்ணின் பரிந்துரையின் கீழ் வந்ததால் கொஞ்ச அவமானத்தோடு நேர்காணலும் முடிந்தது வேலையும் கிடைத்தது 6000ரூ சம்பளத்தில். உட்சபட்ச அறிவிப்பாக இப்ப Web designer தேவையில்லை வேணுமென்றால் PDF CREATOR வேலை பாரென்றார்கள். சரிபார்ப்போம் அடுத்த வேலை கிடைக்குற வரைக்கும் என்றெண்ணி என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

வேலை கிடைத்த சந்தோஷத்தில் வழக்கம்போல குடித்தெந்தித்து காலை நண்பனிடம் சட்டை/பணம் கடன் வாங்கி ஜெமினி பாலமருகிலுள்ள அலுவலகம் வந்து சேர்ந்தேன். முதல் நாள் வேலையெதும் தரவில்லை அறிமுகம் மட்டும் படுத்தினார்கள்., சென்னை Anchor Mansion நண்பர்பளுடன் இருந்ததால் புது நண்பர்களுடன் பழகுவதில் பயமேதுமில்லாமல் பழகிவிட்டேன். அலுவலக நண்பர்களிடம் நண்பனின் நண்பி யாரென்னு விசாரித்து பார்க்க முயற்சித்தேன் அவர் சூப்பர் சீனியர் பார்க்க முடியாது என்றார்கள்., சரி 10:20 என்ற விகித்தத்தில் பெண்கள் அணித்தலைவரும் பெண்ணே அவர்கள் மேல் ஒரு கண் பணி மீது ஒரு கண் வைத்து பரக்கப்பார்த்துக்கொண்டிருந்தேன். நடுநடுவே நாம தான் Web Designer ஆச்சே நம்மள ஏன் PDF CREATORல உட்கார வச்சிருக்காங்கனு ஒரே யோசனை., பக்கத்துல இருந்த நண்பர் ஒருவர் என்ன பண்ணனும் எப்படி பண்ணனுமென்று சொல்லித்தந்தார் கூடவே அன்றே அலுவலகத்தின் அனைவரைப் பற்றியும் அவர்தம் காதல் பழக்கவழக்கங்கள் எல்லாத்தையும் கூறியிருந்தார். அன்றைய நாள் இனிதாக முடிந்தது.

மறுநாளும் வந்தாயிற்று அந்த நண்பியை தேடியாயிற்று நேற்று சொல்லிக்கொடுத்ததை இன்று மெதுவாக செய்யச்சொல்லிப் பணித்தார்கள் நானும் ஆர்வத்தோடு CUT COPY PASTE செய்ய ஆரம்பித்தேன். ஒரு மணிநேரம் ஆகியிருக்கும் மனம் அல்லாட ஆரம்பித்தது CCPல வாழ்க்கை போயிடும் போலையே? இதுல எப்படி எப்படி முன்னேற? கை நிறைய சம்பளம் வாங்க? காதல்ல ஜெயிக்கனு? ஒரு 10-20 கேள்வி ஒன்னத்துக்கும் பதிலில்லை., அதிர்ஷ்டவசமாக மின்னிணைப்பு வேற போனது கடகடனு ஆளுக்கொரு ஆளாக குழுவாக பேசிக்கொண்டிருந்தனர்., நான் புதுசு என்பதால் தனியாக உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன்., சரி இன்னைக்கு எப்படியாவது நண்பியப் பார்த்து ஒரு தெளிவான முடிவெடுத்துட்டு போயிடலாம்னு இருந்தேன் கடைசிவரை மின்னிணைப்பும் வரல நண்பியையும் பார்க்கலை.

3வது நாள் ஒரு பெரும் மனப் போராட்டத்துக்குப்பின் நண்பியைப்பார்த்து சொல்லிவிட்டு பணியிலிருந்து நின்றுவிடலாமென்று முடிவு செய்து ஜெமினி பாலத்திற்கு பயணம் செய்தாகிவிட்டது. அலுவலகத்திற்கு 100மீ முன்னர் உள்ள ஒரு கடையில் வழக்கம்போல காலை உணவாக டீ பருகிக்கொண்டிருந்த சமயத்தில் சடாரென ஒரு வீரம் ஒரு தெளிவு நம்ம வாழ்க்கை நாம முடிவெடுக்காம யார் எடுப்பா முதலடி ஒழுங்கா வைக்கல வாழ்க்கைப்பூரா சேத்துல/சோத்துல ஒரு கால்னு அலைய வேண்டியததானு ஒரே நேர்மறை எண்ணங்கள். 3வது நாள் ரண ரணமாக கடந்தது அன்று நண்பி கண்ணில் படக்கூடாதென்று ஒழிந்து மறைந்து அன்றைய தினத்தையும் ஒப்பேத்தினேன். வேலையை விட்டாயிற்று பரிந்துரை செய்த நண்பனிடம் சொல்லாமல் மைசூருக்கு உடன் வந்தவனிடம் மச்சான் அவன்ட்ட சொல்லிடுடா நான் இன்னொரு நாள் பேசிக்கிறேனு சொல்லி அடுத்த வேலைதேடலுக்கான படலம் தொடங்கியாயிற்று.

நண்பர்கள் உதவியுடன் அப்பா மாமா அப்பப்போ தரும் பணத்துடன் சோகமாய் சந்தோஷமாக குடித்து கும்மாளமாய் அழுது ஒப்பாரி வச்சி ஏமாந்து கடைசில ப்ரோக்கருக்கு 2500 கொடுத்து ஒரு கம்பெனில நேர்காணலுக்கு ரெடி பண்ணி முதலாளி புண்ணியவான் பாவப்பட்டு வேலையும் தந்துட்டாப்ல அங்கையும் அதே 6500ரூ தான் சம்பளம் ஆனால் நான் வேலை செய்ய விரும்பிய துறை., முதலாளி, கூகுளாண்டவர், யூடூப்பாண்டவர் உதவியில் வலைதளம் உருவாக்கியாச்சி அது CCTV Installation கம்பெனி என்பதால் வாரத்திற்கு ஒரு வலைதள உருக்கமென்று வாழ்க்கை நேர்கோட்டில் சேர் ஆட்டோ, வழக்கமாக ஒரு பெண் பார்த்துபையிங், வேலை, சம்பளம், குடியென்று அழகாக சென்று கொண்டிருந்தது., ஒரு வருட இறுதியில் 9600க்கு சம்பளம் வந்து நின்றது.

அதான் படிச்சு 2 வருசம் வேலைப்பார்த்து 1 வருசம் ஆச்சேனு வெளிநாட்டு ஆசையை துளிர்க்கச்செய்தேன். ஒரு இஞ்ச் கூட துளிர விடாது நடுரோட்ல புரட்டி புரட்டியெடுத்தது வாழ்க்கை., நீங்கள் படத்தில் கூட பார்த்திரா வண்ணம் வழக்கம்போல அசிங்கங்கள் அவமானங்கள் பெருத்த ஏமாற்றங்களென்று தனிப்புத்தகம் எழுதுமளவு ஒரு வருடம் போயிற்று., இருக்குற வேலையையும் விட்டு அப்பா, நண்பர்கள்,காதலி உதவியுடன் எல்லாத்தையும் கடந்து ஒருவழியாக இறுதியில் வெளிநாடும் வந்தடைந்தேன் அங்கும் நான் விரும்பிய துறை 2 வருட ஒப்பந்தம்., பெரிய கம்பெனி அதிக தயாரிப்புகள் என்பதால் ஒரே வலைதளம் ஆனால் சற்று பெரியது அதை முடித்து அதற்கான Social media marketing, SEO எல்லாம் முடித்தவொரு தருவாயில்., வேலையில்லாது திரியும் எனக்கு என்ன வேலை கொடுப்பதென்று யோசித்த என் அரேபிய மொதலாளி Product PDFல் நமது Supplier/manufacturer பெயர்களையெல்லாம் எடுத்துவிட்டு நம் கம்பெனி பெயர் முத்திரை முகவரி சேர்த்து PDF SIZEஐ குறைத்து மறுபதிவேற்றம் செய்யென்றார்.

நான் வேண்டாமென்று சொன்ன வேலை இந்த வேலையால் என்னைப் பரிந்துரைத்த நண்பனுக்கும் அந்த நண்பிக்கும் சண்டை., அதனால் என் கூடையும் 2 வருசமா பேசலை. உடனிருந்த நண்பர்கள்லையே பலர் என் செயல் தவறு நான் ஒரு சிலாப்பியென்று என் முன்னும் பின்னும் திட்டியதெல்லாம் நினைவில் வந்து போகிறது …

அதையெல்லாம் நினைத்து சிரித்துக்கொண்டே PDF CUT COPY PASTE செய்துகொண்டிருக்கிறேன்.

இன்றுணர்ந்தது வாழ்க்கை ஒரு நல்ல கதைசொல்லி

+ : கடைசிவரை அந்த நண்பியை பார்க்கவும் இல்லை மன்னிப்பும் கேட்கவில்லை நண்பனிடம் பேசியாயிற்று மன்னிப்பும் கேட்டாயிற்று.

– கோபி.!?
எப்போதும் வென்றான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s