சோகம் ↔ சந்தோஷம் #3

HUSBAND VERSION OF RUN LOLA RUN

ம : டேய் நான் 2 சுடி எடுத்திருக்கேன் டா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உனக்குத்தான் பிடிக்குமானு தெரியல.,
க : எனக்கு ஏன் டீ பிடிக்கனும் நீ இல்லாதப்போ நான் போட்டுட்டு வெளில போகப் போறனா ஹிஹி…
ம : ச்சை ஆளும் மூஞ்சிகளும் உன்ட்ட போயி கேட்டேன் பாரு சிடு மூஞ்சி எப்பப்பாரு ஏட்டிக்கிபூட்டியா பேசிகிட்டு

Stop n Rewind

ம : டேய் நான் 2 சுடி எடுத்திருக்கேன் டா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உனக்குத்தான் பிடிக்குமானு தெரியல.,
க : நல்லா இருக்கு எவ்ளோ டீ
ம : 800ரூ இன்னும் இத தைக்க வேற 600ரூ தெண்டம் வைக்கனும்
தெரியுதுல அப்போ மொத்தமா 1500க்கு ஒரு நல்ல சுடிதார் வாங்கிட்டு வர வேண்டியதானே
க : இன்னும் இத தைக்க கொடுக்கனும் அவன் ஒழுங்கா தைக்கனும் வாங்க அழையனும் எதுக்கு இந்த தேவையில்லாத வேலை., ஒன்னுக்கு 2 கடை ஏறி இறங்க சோம்பேறி
ம : அய்யா ராசா கொஞ்சம் மூடுறியா எல்லாம் எங்களுக்குத் தெரியும் இப்போ நீயா வந்து அலைஞ்சி எடுத்துக்கொடுத்த இல்லைல நான் பார்த்துக்கிறேன் வக்கனைப் பேச்சுக்கு…

husband-and-wife-argument

Young couple arguing

Stop Stop rewind

ம : டேய் நான் 2 சுடி எடுத்திருக்கேன் டா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உனக்குத்தான் பிடிக்குமானு தெரியல.,
க : என்னத்த
இன்னும் 10 வருசம் ஆனாலும் உனக்கு ட்ரஸ் செலக்ட் பண்ணத் தெரியாது டீ எப்பப்பாரு மஞ்சளு சிவப்பு பச்சைனுட்டு ஆட்டக்காரியாட்டம்
ம : ஆமா அப்படியே ஆயிரம் இரண்டாயிரம் பணம் கொடுத்து தள்ளிட்ட இருக்குறதுலையே ஃசீப்பா தேடிப்பார்த்து எடுத்துட்டு வந்தா நக்கல் அடிக்கிற என்னப்பார்த்த அவ்ளோ இழக்காறமா இருக்கு உனக்கு
க : ஏ டீ இப்ப நான் என்ன சொல்லிட்டேன் ஏன் கண்ணக் கசக்குற…

Stop Stop Stop Rewind

ம : டேய் நான் 2 சுடி எடுத்திருக்கேன் டா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உனக்குத்தான் பிடிக்குமானு தெரியல.,
க : ஏ சூப்பரா இருக்கு டீ உனக்கென்ன டீ செல்லம் எது போட்டாலும் நல்லா தான் இருக்கும்
(சென்சார்)
ம : ம்ம்ம் போங்க
ம : தைக்கனும் அப்புறம் இதுக்கு ஏத்த காஸ்மெட்டிக்ஸ் வாங்கனும்ங்க
க : அது எதுக்கு?
ம : அப்புறம் நீங்க பவுன் பவுனா நகை போட்டுத் தள்ளிட்டிங்களாக்கும் பித்தளையை வச்சித்தானே சமாளிக்கனும்
க : அதான் போன தடவை வாங்குன-ல
ம : பித்தளையும் 500/1000க்கு வாங்குனாத் கருக்காம இருக்கும் நாம வாங்குறது 100 ஓவாய்க்கு அதுக்கும் இங்க 1008 நொட்ட கேள்வி வேற.,
எல்லாம் என் தலையெழுத்து…

Stop Stop Stop stop Rewind

(ஒருமாறுதலுக்கு ஒரு சீன் முன்னாடியே ஆரம்பிப்போம்)
ம : எப்பப் பாரு நீட்டி நெழிச்சி தூக்கம் எந்திங்க
லீவு அன்னைக்காவது வெளில போனோம் ஊர்ல முகம் காட்டுவோம்ன்றதுலாம் இல்ல
க : ஏன் டீ இன்னைக்கு ஒரு நாள் தானே லீவு
ம : எனக்கு அதும் இல்லையே இந்தா வேகாத வெயில்ல போய்ட்டு வந்திருக்கேன் இனி நான் தான் சமைக்கனும் கருமம் எனக்குனு எங்கிருந்துதான் வந்திங்களே…

Stop Stop Stop Stop Stop Rewind

(மனைவி வீடு வந்தடைந்த அரை மணி நேரத்திற்கு பிறகு)

க : ஏ குட்டிமா எப்போ டா வந்த
ம : நான் வந்தது இருக்கட்டும் நீங்க எங்க போனிங்க வீட்ட பப்பரப்பேனு போட்டுட்டு ஏங்க கொஞ்சமாவது அறிவிருக்கா கதவ பூட்டிட்டு எங்கையாவது போயி சோவாற வேண்டியது தானே லீவு வுட்டா வீட்ல இருந்தோம் தூங்குனோம்னு இல்ல எங்கையாவது போயி ஊர் கதைப்பேசிக்கிட்டு

Stop Stop Stop Stop Stop Stop Rewind

க : ஏ குட்டி எப்படா வந்த
கால் பண்ணிருக்கலாம்ல
ஈஈஈஈ அய்யோ சாரி டா மொபைல் வீட்டுலையே……
ம : ஏங்க எங்கையும் போயி சோவாரித்தொலைங்க எதுக்கு கதவ பூட்டிட்டு போனிங்க அப்படியே கிலோ கணக்குல உங்க தங்கம் இருக்குனு நினைப்பு

ச்சரி சரி

Stop Stop Stop Stop Stop Stop Stop Rewind

(கதவை மூடி மொபைலை கையில் எடுத்துச் செல்லும் பட்சத்தில்)

ம : ஏங்க கால் பண்ணி எவ்ளோ நேரம் ஆகுது வர வேண்டியது தெருவுல எல்லார்ட்டையும்.,
க : 5 நிமிசம்தானே ஆகுது அங்க இருந்து நடந்துவர வேணாமா.,
இந்த மொட்டை வெளியில் வெளில போகாட்டா என்ன ன்றேன்

உஸ்ஸ்ஸ்ஸ் Stop Stop Stop Stop Stop Stop Stop Stop Stop Rewind

(இது சரிப்படாது வீட்லையே இருப்போம் )
வந்ததே சரியென்று ஏ குட்டி
சென்சார்கட் சென்சார்கட் சென்சார்கட் சென்சார்கட்
ம : ஏங்க விடுங்க எப்பப்பாரு காஞ்ச மாடு……..

க : இதும் போச்சா ம்ம்ம்ம்
Stop stop …. 53 Rewind
Stop. Stop Stop 84 Rewind

To be continued ……
இருந்தாலும் வாழ்க்கை அழகோ அழகுங்க……

கணவர்களுக்கு சமர்ப்பணம் + ஆண்களுக்கு சமர்ப்பணம்

– கோபி.!?
எப்போதும் வென்றான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s