செல்லமக்காவும் சின்னராஜூம்

டேய் மணி நான் போறேன் எந்திச்சி குளி., மேகலை அவனையும் எழுப்பிவிடு நீ தலைக்கு குளிக்காத தலைக்கு ஞாயித்து கிழமை குளிச்சிக்கலாம்., தலையை வாரிக்கட்டி பவுடர் அடித்தவாரே மணியின் காலில் ஒரு மிதி மிதிக்கிறாள் செல்லம்மா., இன்னைக்கும் லேட்டாகிப்போச்சே என்ன அவசர அவசரமாக ஏலேய் எந்திச்சி கிளம்பு., அக்கா கூடவே போ போறப்போ கடைக்கு வந்துட்டுப்போங்கனு கத்திக்கொண்டே டீ, வடை, இட்லி, தோசை, முட்டை பரிமாறத் தேவையான உபகரணங்களை வண்டியில் தூக்கி போட்டவாரு தள்ள ஆரம்பித்தால்., என்ன செல்லம்மா இன்னைக்கு லேட்டா அட ஆமா சார் வாங்க சார் உளுந்தவடைலாம் இருக்கு ம்ம் ம்ம் போ போ வாரேன் என்றார் முக்குத்தெரு சிவா அண்ணன்… அதிகாலையென்பதால் வாகன நெரிசல் ஏதுமில்லை தள்ளக்கடினமாக இருந்தாலும் இடையூறு இல்லாமல் தள்ள சுலுவாக இருந்தது., காலை 6.10 இருக்கும் அவள்தன் வியாபாரம் செய்யும் இடமடைந்தால்.

ஆசியாவின் ரெண்டாவது பெரிய கடற்கரை கொண்ட இடமல்லவா தானாக வளர்ந்ததோ தான் வளர்த்தெடுத்ததோ பெரும்பாலும் தொப்பை கனவான்களே மெரீனா பீச்சை ஆக்கிரமித்திருப்பார்கள் தவிர ஆங்காங்கோ பெண்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்களென்று காலை மெரீனா களைகட்டும் பெருசு இளசென்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் செல்லமக்கா பழக்கம்., கை கழுவ வாளியில் தண்ணி எடுத்து வைத்துவிட்டு உட்கார 5 நாற்காலியை போட்டுவிட்டு யாரையோ வேண்டி வணங்கி அடுப்பை பற்ற வைத்தால் அதற்குள் பக்கத்து கடை மேரியக்கா விடம் என்னாடி இன்னைக்கு சீக்கிரமே வந்துட்ட போல செம அள்ளு அள்ளிட்டியா என்று வம்பிழுத்தாள் எங்க அதான் நீ வந்துட்டல என்று முணங்கினாள் மேரியக்கா., பின் ஆரம்பித்தது அக்கா டீ வடை, செல்லம்மா ஒருசெட் தோசை 2 இட்லி, செல்லமக்கா 2 தோசை ஒரு ஆம்லேட் பார்சல் என்று ஒவ்வொருவராய் வர செல்லமக்கா பிசியோ பிசி., என்ன சார் அம்மா எப்படி இருக்காங்க உடம்பு சரியாகிட்டா, உங்களுக்கு கால் வலினிங்களே பரவாயில்லைங்களா என வினவும் அளவு எல்லோரிடத்திலும் வியாபாரத்தினை தாண்டியதொரு அன்பு., என்னதான் மூச்சவிட முடியாத தம் கட்டி வேலை பார்த்தாலும் ச்ச இன்னைக்கு அவ்வளவா கூட்டமில்லையே என்னவென்று வெதும்புவது வழக்கம் அவ்வாறே இன்றும்., இதனிடையில் 8.35 இருக்கும் மணியும் மேகலையும் அம்மாவிடம் சொல்லிச்செல்ல வந்தார்கள் ஏலேய் சாப்ட்டியா, மேகலை 2 பேருக்கும் சாப்பாடு எடுத்து வச்சியா ரொம்ப எடுத்தியா இனுக்கி இனுக்கி வச்சிருக்கியா எங்க காட்டு., அதலாம் இல்ல மா ரொம்ப தான் வச்சிருக்கு லேட்டாகுது நாங்க போறோம் டாட்டா., ஏலேய் இந்தா துட்டு எதாவது வாங்குறப்போ அக்காக்கும் கொடு வர்றப்பவும் அக்கா கூடையே வா தனியா வந்த தோல உறிச்சிட்டேன் பார்த்துக்கோ ம்ம் சரி சரி ஃபாய்.

இந்நிகழ்வில் வாடிக்கையாளர் ஒருவர் என்ன செல்லம்மா அதான் தோளுக்கு மேல வளந்துட்டாங்கள அப்புறமென்ன இவ்ளோ பயம் ., அட போங்க சார் முட்டிக்கி கீழ இருக்குற பொண்ணையே விட மாட்றாங்களாம் இதுல தோள்பட்டையென்ன கரண்டகாலென்ன பொண்ணைப் பெத்தாச்சே அவளைத்தவிர வேறயாரையும் நம்புறதா இல்லை அதான் தம்பியாண்டன கூடவே போகச்சொல்றேன்., அதுவும் சரி தான் என ஊங் கொட்டினார். 9ஐ நெருங்கும் வேளையில் கொஞ்சம் கூட்டம் குறைய ஆரம்பித்தது அப்பொழுது தான் செல்லம்மா ஆரஅமர ஒரு டீ குடிக்க ஆரம்பித்தாள்., 9க்குப்பிறகான வாடிக்கையாளர்களுக்கு கவனிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் ஏனா இருக்குறதை வித்து தீரனுமே அதும்போக சாப்பாடு அப்படி இப்படி இருந்தாலும் பேசுற பேச்சு மட்டுமே வாடிக்கையாளரை தக்க வைக்கும் இது எல்லா தொழிலுக்கும் அடிப்படைனாலும் ஹோட்டல் தொழிலுக்கும் அதிமுக்கியம்., அப்படி 10.30 வரை ஒப்பேத்தினால் முடிந்த பாடில்லை மிஞ்சிப் போனால் இன்னும் 30 நிமிடம் அதுக்குமேல தாங்காது என்றெண்ணி இருக்குற தண்ணிக்காக பாத்திரத்தை கழுவ ஆரம்பித்தாள் அந்நேரம் தான் வந்தார் ஒருவர் நெடுவாட்ல கட்டம்போட்ட சட்டை, அழுக்குல வேலை பார்க்கவே பிரத்யேகமாக தயாரித்தது போலிருந்தது தூங்கி 3 நாள் ஆனவொரு முகம் பார்க்க அப்படி இப்படி இருந்தாலும் கடைக்கு வந்தபிறகு வாடிக்கையாளர் ஆச்சே., டீ கேட்டார் கொடுத்தாயிற்று உளுந்தவடை அவரே எடுத்தாயிற்று! சாப்பிட ஆரம்பித்துவிட்டார் ண்ணா இட்லி இருக்கு தோசை இருக்கு முட்டை தோசை கூட போடலாம்னானு கொக்கியைப்போட்டால் அவரும் சுத்திப்பத்தி பார்த்துவிட்டு 2 தோசை 1 ஆம்லெட் சாப்ட்டுவிட்டு டீ வடைக்கும் சேர்த்து பைசா கொடுத்துவிட்டு கிளம்பினார் போறப்போ இங்க வந்தா நம்ம கடைக்கு வாங்கணா என்றாள் அவரும் ம்ம் என்றார், சரி இதுக்கு மேல தேராது வெயில் பொழக்க ஆரம்பிச்சிடுச்சி எல்லாத்தையும் தூக்கி வாரிப்போட்டு வீட்டை நோக்கி நடையக்கட்டினாள்.

வீடென்னமோ நடக்குற தூரம் தான் வரும்போது இருந்த பளு இப்பொழுது இல்லையென்றாலும் போக்குவரத்தை கடந்து இருப்பிடம் வருவதற்குள் சற்று அசந்துதான் போனால் செல்லம்மா., வந்ததே சரியென்று முகத்தை கழுவிக்கொண்டு காலை மதியத்திற்கும் சேர்த்து ஆரஅமர மிஞ்சிய இட்லி தோசையைத் தின்றாள்., பின் அந்த தட்டோடு சேர்த்து வண்டியில் கழுவிஎடுக்க வேண்டிய மொத்தத்தையும் கழுவியபின் மீண்டும் வண்டியிலையே கவுத்தி வைத்தாள்., நண்பகலை எட்டியிருந்தது அப்படானு கொஞ்சம் உட்கார்ந்து இன்றைக்கான லாபத்தை கணக்கிட்டுக்கொண்டிருந்தாள் கைபிடிக்கவில்லை மற்றபடி மெச்சும்படியான வருமானமும் இல்லை அதுக்கென்று தொழிலை விடமுடியாதே லாப பணத்தை எடுத்துக்கொண்டு நாளைக்கு தேவையான அரிசி பருப்புகளை வாங்கச் சென்றாள் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு பக்கத்துவீட்டுக்காரர்களிடம் பேசி மெதுவாய் வீடுவந்து சேர்ந்தாள் அரிசையையும் பருப்பையும் ஊற வைத்துவிட்டு சாய்ந்தவள் அசதியில் உறங்கிப்போனாள் மணி 3.20 இருக்கும் திடீரென்று முழிப்புத்தட்டி எழுந்தவள் மறுநாளைக்காக பணிவிடைகளை செய்ய ஆரம்பித்தாள் முதலில் அரிசையை கிரைண்டரில் போட்டாள்., நடுவில் காலை மிஞ்சிய தோசையை உதிர்த்து தாளித்து வைத்தாள் உப்புமாவாக., மிஞ்சிய இட்லியை தண்ணி தெளித்து மீண்டும் வேகவைத்து எடுப்பது வழக்கம் மாலை இட்லி வேண்டி வருபவர்களுக்கு இப்பொழுது போட்டதென்று விற்றுவிடுவது வழக்கம்., பள்ளி சென்ற பிள்ளைகள் வரும் நேரமாயிற்று டீ போட ஆரம்பித்தால் அவதானித்தது போல் கொதித்து இறக்குவதற்குள் வந்து சேர்ந்தார்கள் அக்காவோடு தான் வந்தான் மணியும் கொஞ்சம் சந்தோஷம் செல்லம்மாக்கு., ஏலேய் டீ போட்டுட்டேன் உப்புமா இருக்கு சாப்பிட்டுட்டு வெளில போ, அம்மாமாமா இன்னைக்கும் உப்புமா எனக்குலாம் வேணாம் நீயே திண்ணு டீ மட்டும் தா., மேகலை டிவியில் லயித்திருந்தாள் மணியும் டீ குடித்துவைத்ததும் விளையாட வெளியே போய்ட்டான் இந்நிகழ்வின் நடுநடுவே மாவை கவனித்து பக்குவமாக வளித்தெடுத்து அடுத்து , வேகவைத்த இட்லியை இறக்கி வைத்துவிட்டு வீடுவாசல் பெருக்கியிருந்தாள்., ஏட்டி மேகலை போதும் டீவி பார்த்தது படிக்கலையா நாளைக்கும் ஸ்கூலா ஆமாமா மதியம் வரைக்கும் ஏம்மா லீவு னா வேலை வாங்கலாம்னு ப்ளான் போட்டியான்றாள் இல்லைனு சொல்வதற்கில்லை தானே மந்தமாக சிரித்துவைத்தாள் செல்லம்மா, சரி சரி படி அதையாவது ஒழுங்கா செய் மேகலையும் வழக்கம்போல புத்தகத்தை எடுத்து உட்கார்ந்தாள் மேகல ன்னாம்மா காலைல வச்ச சோறு இருக்கு உப்புமா இருக்கு கடைல சால்னா வாங்கிப்போமா ம்ம் எனக்கு ஓக்கோ மணிட்ட கேட்டுக்கோ, பாரேன் மணி 6.30 ஆகிப்போச்சி இன்னும் வந்துருக்கனானு பாரேன் வந்தோம் படிச்சோம் ன்றதுலாம் இல்லை எப்பையும் திட்டுவதில் பாதிகூட திட்டியிருக்கவில்லை மணி வீடு வந்து சேர்ந்திருந்தான் இயலாமை கோபமாய் வீடெங்கும் பரவிக்கிடந்தது சரி ம்மாம்மா விடு இப்போ நான் படிக்கவா வேணாவா இப்படி கத்தினு இருந்தா நானெப்படி படிக்க ஆமா படிச்சித்தள்ளிட்டாலும் படி படி வழக்கம்போல போல மணியும் பத்தகத்தை விரித்துவைத்து அக்கா பக்கத்தில் உட்கார்ந்தார்., இருவரும் கள்ள சிரிப்பை பரிமாறிக்கொண்டனர்., சற்று ஓய்ந்த சத்தம் மீண்டும் ஆரம்பித்தது உங்கப்பனா இருக்கான் அரிப்பெடுத்தவன் அவனாட்ட மயிரே போச்சினு போய்ட்டான் என்னாலலாம் முடியுல இப்படி வண்டி தள்ளி பத்து வரைக்கும் வேணா படிக்க வைக்க முடியும் அதுல நல்ல மார்க் எடுத்தா பள்ளிக்கூடத்துல ஸ்காலர்சிப் தருவாங்க அதுல மேல படிக்க வைக்கலாம்னு பார்த்தா நீங்க இப்படி பண்றிங்க கேட்டும் கேட்காத இருவரும் புத்தகத்தில் தலையை புதைத்திருந்தனர்.

மணி 8ஐ நெருங்கி இருந்தது பசங்களும் படித்து முடித்திருந்தனர் அரிசிமாவையும் உளுத்தம்பருப்பு மாவையும் கலவை செய்து கொண்டே ஏய் சாப்பிடுறதுனா சாப்பிடு டா மேகலை அந்த டிவிய போட்டு செய்தி வச்சிவிடென்றால் செல்லம்மா ஆக பார்ப்பது இதொன்று மட்டும்தான் என்பதால் எவ்வித சேனல் சண்டைக்கும் இடமில்லை மேகலையும் புதியதலைமுறை சேனலை வைத்துவிட்டு அவர்களும் முன்பிருந்து பார்த்தனர் செல்லம்மா அவர்கள் பின்னிருந்து கேட்டுக்கொண்டிருந்தாள், சென்னையில் இன்று ஒரே நாளில் சென்னையின் வெவ்வேறு இடங்களில் 6 கொலைகள் நடந்துள்ளது பொதுமக்கள் வாழ்வில் பதட்டத்தை உண்டு பண்ணியுள்ளது.,தலையை நிமிர்ந்து டிவியை பார்க்க ஆரம்பித்திருந்தாள்.,

இன்று காலை தனியார் மென்பொருள் நிறுவன கணிப்பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலைசெய்யப்பட்டது, பொது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை.

சென்னை – கேளம்பாக்கம் அருகே, தையூர் ஊராட்சி அலுவலகம் பின்புறம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் பாண்டியம்மாள் என்ற பெண்ணும் அவரது மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா ஆகியோரை, தந்தை என்று சொல்லப்பட்ட சின்ன ராஜ் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்க சின்னராஜ் வந்தார். அப்போது மறைந்திருந்த தனிப்படைப் போலீஸார் அவரை கைது செய்தனர்.,விசாரணையின் போது மூன்று மகளையும் தன் மகள்களாக பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி பாண்டியம்மாளுடன் வாழ்ந்து வந்ததாகவும் சமீபத்தில் சொந்த ஊர் சென்று திரும்பியவன் ஊரில் பெண் பார்ப்பதாகவும் இனியும் நாம் சேர்ந்து வாழ முடியாது அப்படி வாழனும்னா உன் மூத்த பெண்ணை எனக்கு மனம் முடித்து வையென்று சொல்லியுள்ளார் பின்னர் பாண்டியம்மாளுக்கும் சின்னராஜ்க்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது 3 நாள் முன்னாடி நடுசாமத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாண்டியம்மாளை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார் அப்போது தடுக்க வந்த 3 மகள்களையும் சேர்த்து கொன்றுள்ளார்”

இவன் காலைல…. என் கையால இவனுக்கு

அய்யோவென்று கூப்பாடிட்டு இந்த படுக்காளிப் பயலுக்காக என் கையால சோறு போட்டேன் என்று கத்தி அழ ஆரம்பித்திருந்தாள் கோபத்தில் மாவை எட்டி உதைத்திருந்தாள்…

– கோபி.!?
எப்போதும் வென்றாள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s