நடிகன்…

போகாத கல்லூரிக்கு அடிக்கடி போகச் சொன்னார்கள்!!

போடாத சண்டையை போட்டேன் என்றார்கள்!!

வரவே வராத நடிப்பை நடித்தேன் என்றார்கள்!!

என் மகளாய் நடித்தவளை என்னவளாய் உடன் கிடத்தினார்கள்!!

என் மனைவியாய் நடித்தவளை அம்மாவென்று சொல்லச்சொன்னார்கள்!!

பார்த்தாலே டெஸ்ட்டோஸ்டீரான் பொத்துக்கொண்டுவரும் ஒருத்தியை கடவுளென்று வணங்கச் சொன்னார்கள்!!

நான் வெறுமென நடப்பதையே இசை கொண்டு கெத்தாக்கினார்கள்!!

பிட்டத்தை பிணைவதையும் ஆண்மையாக்கினார்கள்!!

கதைக்கான நடிகனாய் நடித்தால் மொக்கையென்றார்கள்!!

நடிக்கான கதையில் நடித்தால் தரகெத்தென்று கூத்தாடினார்கள்!!

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆவதற்கும் என்னை அரசியல் பேச வைத்தார்கள்!!

ரிலீஸ்க்கு ஒரு வாரம் முன்பிலிருந்து பேட்டியெனும் பெயரில் பிச்சை எடுக்க வைத்தார்கள்!!

நடிகன் என்ற காரணத்திற்காக எல்லா பிரச்சனைகளுக்கும் என் அபிப்பிராயம் என்னவென்றார்கள்!!

நான் என்ன சொன்னாலும் ஆமாவென்று உச்சுக்கொட்டினார்கள்!!

இருப்பவர்கள் போதென்றோ என்னமோ என்னையும் இன்றைய கடவுளாய் நாளைய முதல்வராக்கினார்கள்!!

சிலசமயம் பணமும் கொடுத்து விருதும் கொடுத்து மேடையேற்றினார்கள்!!

ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஓட்டுப்பிச்சைக்கு அரசியல் படிக்கச் சொன்னார்கள்!!

என் படுக்கையறை வரை கேமரா வைத்து அதை காசாக்கினார்கள்!!

இன்னும் பலகோடி என்றார்கள்!! என்றார்கள்!! என்றார்கள்!!

என்று என்னையும் சோத்துக்கு அரிதாரம்பூசும் சகதொழிலாளி என்பார்களோ ?

சக மனிதன் என்பார்களோ?

– நடிகன்

– கோபி. !?
எப்போதும் வென்றான்

Leave a comment