நீங்களும் அரசியல்வாதியே…

சரியென்று தோன்றினால்? உங்களால் முடியும் செய்யுங்கள்.!?

நான் ரொம்ப சாதாரணமான மனுஷன் என்னால என்ன பண்ண முடியும் மிகச் சாதாரணமாக எல்லாரும் வாழ்வில் ஒருமுறையேனும் உபயோகித்திருக்கும் வார்த்தைகள். என்னால இந்த நாட்டுக்கு என்ன பண்ணிட முடியும் நான் தென்கோடியில் ஊரின் கடைக்கோடி வீட்டில் இருக்கேன் என்னால என்ன பண்ணிடமுடியும்னு நினைக்குற? நம்மளால தான் நாம நினைத்தால் சாத்தியம் நம் ஒவ்வொருவரின் பின்னாலையும் தெரு/உள்ளூர்/உலக அரசியலும் இருக்கு ஆனா நாம கண்டுக்கிறதே இல்லை நம் கட்டுப்பாட்டில் நம் செயல்களின் செயற்பாடே நாளைய அரசியலை உண்டாக்குகிறதுனு நாம உணர்ந்திருக்கோமா ?
உதாரணம் 1 :
மின்சாரம் இந்த ஒற்றை வார்த்தை கொண்டு இருகட்சி ஆட்சிபிடித்து ஆட்சியில் ஒன்றும் செய்ய முடியாமல் உட்காந்திருப்பது தனிக்கதை அத விட்டுருவோம். அத சரி நம்மளால என்ன பண்ண முடியும்?
1) பகல் நேரத்துல தேவையில்லாம எரியுற பல்பை அனைத்திருக்கோமா?
2) விடிய விடிய ஓடுற காத்தாடியை காத்தடிக்கும் போதாவது அனைத்திருக்கோமா?
3) இப்போ ஏசிக்கு மாறிட்டாங்க ஏசியையும் ஸ்டேட்டஸா மாத்தி ரொம்பநாள் ஆச்சி குளிர்ல நடுங்கி செத்தாலும் ஏசி ஓடிட்டு இருக்கனும்!
4) பார்க்குறமோ இல்லையோ காலைல இருந்து நைட் கண்மூடும் வரையில் டீவி/லேப்டாப் ஓடிட்டே இருக்கனும். !?

இதலாம் நான் பண்ணுனதே இல்லைனு யாராலையாவது கை தூக்க முடியுமா?

தெருவுல போறவன் பைக் ஹெட்லைட்ல காட்டுற சமுதாய அக்கறை நம்ம வீட்டுல என்னைக்காவது காட்டுறோமா? நான் ஒருத்தன் அனைப்பதால தமிழ்நாடு மொத்தத்துக்கும் கரெண்ட் பஞ்சம் தீர்ந்திடுமானு ஒரு அறிவு சார்ந்த கேள்வி எழலாம். பதில் என்னமோ இல்லை என்பது ஆனால் தேவை குறையும் என்பதே நிதர்சனம். உன் வீட்டுல நீ ஒழுங்கா இருந்தா தைரியமா பக்கத்து வீட்டு வாசல்ல எரியுற லைட்டை அனைக்கச்சொல்லலாம். நீங்க ரெண்டு பேரும் ஒழுங்கா இருந்தா கவனக்குறைவில் ஊருக்குள்ள பகல்ல எரியுற தெரிவிளக்கை அணைக்கச் சொல்லி சண்டை போடலாம் இப்படித்தானே மாற்றத்தையும் நம் மின்சாரத் தேவையையும் தீர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணம் 2 : மூன்றாம் உலகப்போர் வருவதாயிருந்தால் அதற்கான ஒரே காரணம் “தண்ணீர்” ஐநா சபை உறுப்பினர்ல இருந்து சாக்கடை அள்ளுபவன் வரை அனைவரும் அறிந்த/தெரிந்ந/உணர்ந்த ஓர் உண்மை ஆனால் அது வராமல் தவிர்ப்பதற்கு நம்மளால முடிஞ்சது எதை செய்துள்ளோம் ?ம்ம்ஹூஹூம் தான்.

தெருவுல சொட்டுற பைப்பை அடைச்சிட்டேன் நானாலாம் தண்ணியை வீணாக்குவதே இல்லைனு ஒரு கூட்டம் அலையுமே அவர்களுக்கு கொஞ்சம் அழுத்திச்சொல்கிறேன்.

காலைல தான் தேய்ச்சி வச்சிருப்போம் மதியம் சாப்பிடும் போது தேய் தேய்னு பாத்திரத்தை கழுவுறப்போ, ஊடல் சூட்டை மதியம் முழுவதும் தாங்குவதற்காக காலையிலேயே உடலை பக்குவப்படுத்த எடுப்பதே காலை குளியல் ஆனா நாம நனைக்க ஒரு பக்கெட், சோப்புக்கு ஒரு பக்கெட், பிரஷ்னெர் ஜெல் தேய்த்து ஒரு பக்கெட், பிரஷ்ஷ்ஷாஷா குளிக்குறாங்களாம் (நீங்க எப்படி குளித்தாலும் உங்க உடம்புல அழுக்கு போகாது & உங்க அழகை கூட்டுவதற்கு எவ்வளவு கிரீம் வாசனை திரவியத்தை உபயோகிக்கிறீர்களோ அந்த அளவுக்கு உடம்பு நாசமாப் போகும் நான் சொல்லலை அறிவியல் சொல்லுது) சுத்தம் சுகம் தரும் -ன்ற பேர்ல டாய்லெட்ல ஒன்னுக்கு அடிச்சினு பிஷ்னு ஒரு அமுக்கு டேங்ல உள்ள மொத்த தண்ணியும் கலாஷ். உன்ன குளிக்க வேணாம் பாத்ரூம் போயிட்டு தண்ணி ஊத்த வேண்டானு சொல்லலை அளவா தண்ணி எடுத்துக்குளி, பக்கெட்ல தனியா தண்ணி பிடிச்சி கப்புல எடுத்து ஊத்து ஒன்னுக்கு போறப்போ வேண்டானு இருக்கா.

அங்க எப்படி ஏசியோ இங்க வாசிங்மெசின் உடல் உழைப்பை குறைத்து சோம்பேறியாக்கும் அனைத்து பொருட்களும் ஸ்டேடட்ஸ் -ன்ற பேர்ல மிகச்சாதாரணமாக நம் வீட்டை ஆக்கிரமிக்கின்றன. ரெண்டு ஜட்டிக்கும் வாசிங்மெசின் பூரா தண்ணி, ரெண்டு வாளித்துணிக்கும் வா.மெ பூரா தண்ணி. நனைப்பதற்கு ஒருமுறை, பவுடர் போட்டு ஒரு முறை, மீண்டும் நுரை போவதற்கு ஒரு முறைனு தண்ணி நிரப்பி அழசி வெளில எடுத்துப் பார்த்தா அழுக்கு அப்படியே இருக்கும் திரும்ப அத கசக்கி தண்ணில முக்கி வாசனை எடுக்குறதுக்கு இன்னொரு தண்ணில முக்கி காயப்போடும் போது டேங் தண்ணி மொத்தம் காலி.(கையாலே துவைக்க வேண்டியதேனு சொன்னா அடக்குமுறை, கொடுமை லிஸ்ட்ல சேர்த்திடுவாங்க)

அறிந்தோ அறியாமலோ நீங்க செய்பவை இவையனைத்தும் நாளை உங்கள் பிள்ளைகள் தலைமுறையை பாதிக்கும்னு சொல்லமாட்டேன் இன்னும் 20 வருஷத்துல உங்களையே பாதிக்கும/ நீங்களே உணருவிங்க! இந்த இரண்டு மட்டுமல்ல அரசு செய்யவில்லை எனக்குத்தம் சொல்லும் அனைத்திலும் அக்கறை எடுத்து செயல்பட வேண்டியதென்னமோ நாம தான். எல்லாரையும் CM ஆக்கமுடியாதுல(இருக்குற கூட்டம் போதும்) உங்களுக்கு நீங்களே CMனு நினைத்துக் கொள்ளுங்கள் உங்களால இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியுமே அதையெல்லாம் செய்யுங்கள் உங்களுடன் சேர்ந்து சமுதாயமும் முன்னேற்றம் காணும்.

மின்சாரம், தண்ணீர்ல இருந்து, குப்பையை குப்பைத் தொட்டில போடுவது, ஒரு சாக்பீஷ்க்கு ஒரு பிளாஷ்டிக் பையை வாங்கிட்டு வர்றது, ஒரு நோட்டிப்கிகேஷன் வரலனாலும் மொபைல ஆன் பண்றது வரை நம் அலட்சியங்களே உலகம் எதிர்கொள்ளப் போகும் பேராபத்தின் ஊற்று. இதானனு நாம மிகச்சாதாரணமா இருக்குறது தான் நாளைக்கு மிகப்பெரும் சமுதாயப் பிரச்சினையா வந்து நிக்கும் இத படிச்சிட்டு உங்களால இப்போதைக்கு முடிஞ்சதை செய்வீர்களானாயில் நீங்களும் அரசியல்வாதியே/நீங்களும் என் நண்பர்களே!

எனக்கு தெரிஞ்சி முன்னோர்கள் “நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில்னு” இதலாம் மனசுல வச்சித்தான் சொல்லிருப்பாங்க போல?

மாற்றத்தை நம்மிலிருந்து உருவாக்குவோம்….

– கோபி.!?
எப்போதும் வென்றான்

Leave a comment